தங்க முதலீடு திட்ட பணமோசடி: பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தங்க முதலீடு திட்ட பணமோசடி: பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் எனக் கூறி ரூ. 20 கோடி வரை பணமோசடி​செய்த விவ​காரத்​தில், பெண் காவல் ஆய்​வாள​ருக்கு முன்​ஜாமீன் கோரிய மனுவை தள்​ளு​படி செய்​து, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய ஷீலா மேரி, தனது உறவின​ரான பிரபு மணி என்​பவர் மூல​மாக, ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதில் தங்​கத்​தில் முதலீடு செய்​தால், அதிக லாபம் சம்​பா​திக்​கலாம் என ஆசை காட்​டி, பலரை அதில் முதலீடு செய்ய வைத்​துள்​ளார்.

காவல்​துறை​யில் பணி​யாற்​றும் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் இந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். கடந்த 2023-24 கால​கட்​டத்​தில் 200-க்​கும் மேற்​பட்​டோர் முதலீடு செய்​திருந்த நிலை​யில், பிரபுமணி அந்த நிறு​வனத்தை மூடி​விட்டு திடீரென தலைமறை​வாகி விட்​டார்.

அதையடுத்​து, ரூ.20 கோடி வரை பணமோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக பிரபுமணி மற்​றும் அவருக்கு உடந்​தை​யாக செயல்​பட்​ட​தாக பெண் காவல் ஆய்​வாளர் ஷீலா மேரி ஆகியோ​ருக்கு எதி​ராக, முதலீடு செய்​தவர்​கள் அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர்.

இதையடுத்​து, இரு​வர் மீதும் வழக்​குப் பதிவு செய்​துள்ள போலீ​ஸார், பிரபுமணியை கைது செய்​தனர். ஷீலா மேரியை தேடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள காவல் ஆய்​வாளர் ஷீலாமேரி, தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி சி.குமரப்​பன் முன்​பாக நடந்​தது. அப்​போது அரசு தரப்​பில், ‘தங்க முதலீடு திட்​டம் எனக்​கூறி பலரிட​மும் ரூ. 20 கோடி வரை மோசடி செய்​துள்ள சம்​பவத்​தில், பெண் காவல் ஆய்​வாள​ரான மனு​தா​ரருக்​கும் தொடர்​புள்​ளது.

எனவே, அவருக்கு முன்​ஜாமீன் அளிக்​கக் கூடாது’ என, ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, பெண் காவல் ஆய்​வாளரின் முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து நீதிப​தி உத்​தரவிட்​டார்​.

தங்க முதலீடு திட்ட பணமோசடி: பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மனமகிழ் மன்றங்களின் உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in