ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி அபராதம் செலுத்த நோட்டீஸ் வந்ததால் விவசாயி அதிர்ச்சி

விவசாயி கிருஷ்ணசாமி.

விவசாயி கிருஷ்ணசாமி.

Updated on: 
1 min read

பெரம்பலூர்: ரூ.4.71 கோடிக்கு வர்த்​தகம் செய்து ஜிஎஸ்டி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக கூறி ரூ.1.70 கோடி அபராதம் செலுத்​து​மாறு நோட்​டீஸ் வந்​துள்​ள​தால் பெரம்​பலூர் விவசாயி அதிர்ச்​சி​யடைந்​துள்​ளார். பெரம்​பலூர் மாவட்​டம் பேரளி கிராமம் சிதம்​பரம் தெற்கு தெரு​வைச் சேர்ந்​தவர் கிருஷ்ணசாமி.

விவசாயியான இவருக்கு, விருதுநகர் நுண்​ணறி​வுப் பிரிவு வணிகவரித் துறை உதவி ஆணை​யர் அலு​வல​கத்​தில் இருந்து விரைவு தபால் வந்​துள்​ளது. அதில், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி அபராதம் செலுத்த வேண்​டும் என கூறப்​பட்டிருந்​தது.

இத​னால் அதிர்ச்​சி​யடைந்த கிருஷ்ணசாமி, நேற்று நடை​பெற்ற மக்​கள் குறைதீர் கூட்​டத்​தில் ஆட்சி​யர் அப்​துல் ராசிக்​கிடம் இது​தொடர்​பாக மனு அளித்​தார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீரங்​கபாளை​யம் முகவரி​யில் செயல்​படும் ஒரு நிறு​வனம், எனது ஆதார் எண், வங்கி ஆவணங்​களை பயன்​படுத்தி ஜிஎஸ்டி பதிவு எண் பெற்​றுள்​ளது.

அந்த ஜிஎஸ்டி எண்ணை பயன்​படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.4.71 கோடிக்கு வர்த்​தகம் செய்​த​தாகவும், போலி ரசீதுகள் மூலம் உள்​ளீட்டு வரிவரவு மோசடி​யில் ஈடு​பட்​ட​தாகவும் வணிகவரித் துறை குற்​றம்​சாட்டி, ரூ.1.70 கோடி அபராதம் செலுத்த நோட்​டீஸ் அனுப்​பியுள்​ளது. ஆண்டு வரு​மானமே ரூ.75 ஆயிரத்​துக்​குள் இருக்​கும் எனக்கு இவ்​வளவு பெரிய தொகைக்கு அபராத நோட்​டீஸ் வந்​துள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

எனது ஆவணங்​கள் தவறாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இது​குறித்து விசா​ரணை நடத்தி, உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு மனுவில் தெரி​வித்​துள்​ளார். மனுவை பெற்ற ஆட்சி​யர், சம்​பந்​தப்​பட்ட துறை அலு​வலர்​களை அழைத்து உடனடி​யாக நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட்​டார்.

<div class="paragraphs"><p>விவசாயி கிருஷ்ணசாமி.</p></div>
பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோவையில் 12 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேர கண்காணிப்பு தீவிரம்

X