திருப்பூர் குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடக்கம்

குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கிய மத்திய தொல்லியல் துறையினர். (அடுத்தபடம்) குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள உயரமான நடுகல்.

குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கிய மத்திய தொல்லியல் துறையினர். (அடுத்தபடம்) குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள உயரமான நடுகல்.

Updated on
1 min read

திருப்பூர்: ​திருப்​பூர் மாவட்​டம் ஊத்​துக்​குளி வட்​டம் குமரிக்​கல்​பாளை​யம் கிராமத்​தில், இந்​தி​யா​விலேயே மிக உயர​மான 27 அடி உயர நடு​கல் அரு​கே, அகழ்​வாய்வுப் பணி​களை இந்​திய தொல்​லியல் துறை தொடங்கியது.

2 ஆயிரம் ஆண்​டு​கள் தொன்​மை​யான நாட்​டிலேயே மிக உயர​மான நடு​கல், திருப்​பூர் மாவட்​டம் குமரிக்​கல்பாளையத்தில் இருப்​பதால், அந்த பகு​தியை அகழாய்வு செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தி, வரலாற்று ஆய்​வாளர்​களும், கிராம மக்​களும் கடந்த 2023 முதல் 2025 வரை 736 நாள் தொடர் காத்​திருப்பு போராட்​டத்தை நடத்​தினர்.

மேலும், அகழாய்​வுப் பணி​களை தொடங்க வலி​யுறுத்தி கடந்த ஆண்டு மே மாதத்​தில் 7 நாள் தொடர் காத்​திருப்புப் போராட்​ட​ மும் நடந்​தது. இதன்பின், அத்​திக்​கடவு - அவி​நாசி திட்ட போராட்​டக்​குழு ஒருங்​கிணைப்​பாளர் சுப்​பிரமணி உள்​ளிட்​டோர், குமரிக்​கல்​பாளை​யத்​தில் அகழாய்வு செய்ய வலி​யுறுத்தி மத்​திய கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் கஜேந்​திரசிங் ஷெகாவத்​திடம் கடந்த ஜன. 17-ல் மனு அளித்​தனர்.

இதற்​கிடையே, 27 அடி உயர நடு​கல் அருகே இரும்​பு, முது​மக்​கள் தாழி, பானை​கள், பானை ஓடு​கள், எலும்​புத்​துண்​டு​கள் என தொல்​லியல் எச்​சங்​கள் நிறைந்த இந்தப் பகு​தியை ஆய்வு செய்ய வேண்​டும் என குமரிக்​கல் தொல்​லியல் பாது​காப்பு சங்​க​மும் தொடர்ந்து வலி​யுறுத்​தி வந்தது.

இந்த நிலை​யில், அகழ்வாராய்ச்சிப் பணி​களை மத்​திய தொல்​லியல் துறை தொடங்கி உள்​ளது. மத்​திய தொல்​லியல் துறை​யின் திருச்சி மண்டல கண்​காணிப்​பாளர் (பொ) அரவாழி தலை​மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட தொல்​லியல் துறை​யினர் தற்​போது ஆய்​வுப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். நடு​கல்​லில் இருந்து 100 - 150 மீட்​டர் தொலை​வுக்கு அகழாய்​வுப் பணிகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதில்,கிடைத்த ரோமானிய வர்த்​தகத்​துக்​கான ஆதா​ரங்​கள், மட்​பாண்​டத் துண்​டு​கள், இரும்பு கசடு​கள், பிற தடயங்​களை, இந்​திய தொல்​லியல் துறை பகுப்​பாய்வு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து அரவாழி கூறும்​போது, “ஈரோடு மாவட்​டத்​தில் தொல்​பொருள் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கொடுமணலில் இருந்து வெறும் 15- 20 கி.மீ. தொலை​வில் அமைந்​துள்ள இந்த அகழ்​வாராய்ச்​சிக்​கான இடம், ரோமானிய வர்த்​தகத்​துக்​கான வலு​வான சான்​றுகளை வெளிப்​படுத்​தும். தொன்​மை​யான நடு​கல் அருகே ஆய்​வுப்​பணிகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஆய்​வின் மூலம் பெருங்​கற்​காலம், வரலாற்று காலத்​துக்​கான ஆதா​ரங்​கள் கிடைக்க வாய்ப்பு உள்​ளது. அகழாய்​வு​களின் முடி​வில், தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பாது​காக்​கப்​பட்ட பகு​தி​யாக அறிவிக்க, தொல்​லியல் துறை காத்​திருக்​கிறது” என்​றார். இதன்தொடர்ச்சியாக குமரிக்கல்​பாளை​யத்தில் ஆய்வுப்​ பணி ​முழுவீச்சில் நடந்து வருகிறது​.

<div class="paragraphs"><p>குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கிய மத்திய தொல்லியல் துறையினர். (அடுத்தபடம்) குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள உயரமான நடுகல்.</p></div>
மடப்புரம் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in