மடப்புரம் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை மாவட்ட நீதிமன்றத் தில் ஆஜரான நிகிதா.

மதுரை மாவட்ட நீதிமன்றத் தில் ஆஜரான நிகிதா.

Updated on
1 min read

மதுரை: மடப்புரம் அஜித்​கு​மார் மீது நகை திருட்டுப் புகார் அளித்த பெண் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி, நகை திருட்டு புகாரை முடிக்க ஆட்​சேபனை இல்லை என தெரி​வித்​தார்.

மடப்புரம் காளியம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார், நகை திருட்டு வழக்கு விசா​ரணைக்​காக தனிப்​படை காவலர்​களால் அழைத்​துச் செல்​லப்​பட்டு தாக்​கப்​பட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் தனிப்​படை காவலர்​கள் 6 பேர் கைது செய்​யப்​பட்​டனர். டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் தேடப்பட்டு வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில் தனிப்​படை காவலர்​கள் ஜாமீன் கோரி தாக்​கல் செய்த மனு உயர் நீதி​மன்​றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்​த​போது, அஜித்​கு​மார் மீது நிகிதா என்​பவர் அளித்த நகை திருட்டு புகாருக்கு ஆதா​ரம் இல்லை என்​ப​தால் வழக்கை முடிக்க முடிவு செய்​திருப்​ப​தாக சிபிஐ தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, செய்​யாத குற்​றத்​துக்கு ஒரு​வரை போலீ​ஸார் அடித்​துக் கொலை செய்​துள்​ளனர். போலீ​ஸாருக்கு தகுந்த பாடம் கற்​பிக்க வேண்​டும். விசா​ரணை முடி​யும் வரை சிறை​யில் இருக்​கட்​டும் என்​றார்.

இந்​நிலை​யில் நகை திருட்டு புகார் அளித்த நிகி​தாவை விசா​ரிக்க அனு​மதி கோரி சிபிஐ தரப்​பில் மனுத்தாக்​கல் செய்​யப்​பட்டது. இந்த மனுவை ஏற்று நிகிதா ஆஜராக நீதிபதி உத்​தர​விட்​டார்.

அதன்​படி, மதுரை மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நீதிபதி அசன் முகமது முன்பு நேற்று நிகிதா ஆஜரா​னார். அவரிடம் உங்​கள் புகாரை முடித்து வைக்க சிபிஐ தரப்​பில் மனுத்தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அது பற்றி என்ன தெரிவிக்​கிறீர்​கள் என நிகி​தா​விடம் நீதிபதி கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு அவர், எனக்கு எதுவும் ஆட்​சேபனை இல்​லை, எனது புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கை முடித்து விடலாம் என்றார். இதனை எழுத்​துப்​பூர்​வ​மாக தாக்​கல் செய்ய உத்​தர ​விட்டு விசா​ரணையை மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்​ளி​வைத்தார்.

அதன்பிறகு நிகிதா செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, மடப்புரம் வழக்​கில் என்​னைச் சுற்றி எந்த அரசி​யல்​வா​தி​கள், வழக்​கறிஞர்​கள் யாரும் இல்​லை.

என் புகாரில் உண்மை இல்லை என சிபிஐ கூற​வில்லை. ஆதாரம் இல்லை என்​று​தான் கூறி​யுள் ளது. நகை திருடப்​பட்​டது தெரிந்​ததும் முதலில் கோயில் அதி​காரிகளிடம்​ புகார் அளித்தேன்.

அதன் பிறகே காவல்​துறை​யில் புகார் அளித்தேன். என் செல்​போனை சிபிஐ அதி​காரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர். புகார் அளித்​ததும் நான் மடப்​புரத்திலிருந்து சென்றுவிட்டேன். அதன் பிறகு நடந்தது, அஜித்​கு​மாரிடம்​ போலீ​ஸ்​ வி​சா​ரித்​தது பற்​றி எனக்​கு தெரி​யாது என்​றார்​.

<div class="paragraphs"><p>மதுரை மாவட்ட நீதிமன்றத் தில் ஆஜரான நிகிதா. </p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in