தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள்
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.

Updated on
3 min read

சென்னை: தமிழகத்​தில் 2030-ம் ஆண்டை இலக்​காக கொண்டு பல்​வேறு தொலைநோக்​குத் திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். தொழில் துறை​யில் ரூ.18 லட்​சம் கோடி முதலீடு, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு, அனைத்து அரசுப் பள்​ளி​களி​லும் ‘ஸ்மார்ட் வகுப்​பறை’, விவ​சாய சாகுபடி பரப்பு 50 லட்​சம் ஹெக்​டே​ராக அதி​கரிப்பு என்​பது உட்பட பல்​வேறு திட்​டங்​கள் ‘தி​ரா​விட மாடல் 2.0’ ஆட்​சி​யில் செயல்​படுத்​தப்​படும் என்று அவர் உறு​தி​யளித்​தார்.

தமிழக அரசின் ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்​தின் நிறை​வாக ‘தமிழ்​நாடு 2030 - கனவு​கள் மெய்​ப்​படும்’ எனும் தலைப்​பிலான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்னை நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் ஒவ்​வொரு துறை​யிலும் மேற்​கொள்​ளப்​பட்ட பல்​வேறு நலத் திட்​டங்​களால் மக்​கள் மகிழ்ச்​சி​யாக இருக்​கின்​றனர். அரசின் திட்​டங்​களால் பயனடை​யாத குடும்​பங்​களே தமிழகத்​தில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்​வொரு தரப்​புக்​கும் பார்த்​துப் பார்த்து செய்​துள்​ளோம்.

அரசி​யல் ரீதி​யாக எழுந்த சில நெருக்​கடிகளை சமாளித்​து​தான் பல திட்​டங்​களை செயல்​படுத்​தினோம். இந்த ஆட்​சி​யின் சாதனை​களை நம்பி உறு​தி​யாக கூறுகிறேன். அடுத்​தும் திமுக ஆட்​சி​தான். நமது சாதனை​களின் தொடர்ச்​சி​யாக திரா​விட மாடல் 2.0 ஆட்சி இருக்​கும்.

அடுத்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​தின் வளர்ச்சி எப்​படி இருக்க வேண்​டும் என ஒரு ‘ப்ளூ பிரின்ட்’ தயாரிக்க திட்​ட​மிட்​டோம். அதற்​காக, தமிழகத்​தின் 1.80 கோடி குடும்​பங்​களிடம் நேரடி​யாகசென்​று, அவர்​களது தேவை​களைக் கேட்​டறிந்​தோம். அதில் முன்​னுரிமை அடிப்​படை​யில் ‘தமிழ்​நாடு 2030’ எனும் 14 முக்​கிய அம்​சங்​களை அறிவிக்​கிறேன்.

2030-ம் ஆண்​டுக்​குள் கிராமப்​புறங்​களில் ‘கலைஞர் கனவு இல்​லம்’ திட்​டத்​தின்​கீழ் 5 லட்​சம் வீடு​கள், நகர்ப்​புறங்​களில் 2 லட்​சம் வீடு​கள் கட்டித் தரப்​படும்.

‘நல​முடன் தமிழ்​நாடு 2030’ திட்​டத்​தில் அனை​வருக்​கும் போதிய மருத்​து​வக் காப்​பீடு கிடைக்க வழி​செய்​யப்​படும். நீரிழி​வு, உயர் ரத்த அழுத்​தம், புற்​று​நோயைக் கண்​டறிய சிறப்பு முகாம்​கள், மாவட்​டம்​தோறும் மனநல ஆலோ​சனை மையம் அமைக்​கப்​படும்.

விவ​சாய சாகுபடி பரப்பு 50 லட்​சம் ஹெக்​டே​ராக உயர்த்​தப்​படும். 43 லட்​சம் உழவர்​களுக்கு மண்வள அட்​டைகள் வழங்​கப்​பட்​டு, இயற்கை விவ​சா​யம் 17 ஆயிரம் ஹெக்​டே​ராக​வும், உயிர் வேளாண்மை ஒரு லட்​சம் ஹெக்​டே​ராக​வும் விரிவுபடுத்​தப்​படும். நுண்​ணீர்ப் பாசனம் 21 லட்​சம் ஹெக்​டே​ராக விரிவுபடுத்​தப்​பட்​டு, மேற்​கு, கிழக்​குத் தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்​டமைப்​பு​கள் கட்​டப்​படும். உணவு உற்​பத்தி 1.25 கோடி டன்​னாக உயர்த்​தப்​படும். 1.25 லட்​சம் உழவர்​களுக்கு வேளாண் கருவி​கள் வழங்​கப்​படும்.

அனைத்து அரசு, அரசு உதவிப் பள்​ளி​களி​லும் ‘ஸ்மார்ட் வகுப்​பறை’ அமைக்​கப்​படும். ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ மூலம் 1,000 மாதிரிப் பள்​ளி​கள் விரிவுபடுத்​தப்​படும்.

உயர்​கல்​வி​யில் மாணவர் சேர்க்கை 90 சதவீதத்தை எட்​டும் வகை​யில் கட்​டமைப்பு விரி​வாக்​கப்​படும். ‘நான் முதல்​வன் 2.0’ மூலம் கூடு​தல் திறன் பயிற்சி வழங்​கப்​படும். ஆராய்ச்​சியை அதி​கரிக்க தொழிற்​கல்வி சிறப்பு மையங்​கள் நிறு​வப்​படும். அனைத்து கல்வி நிறு​வனங்​களி​லும் ஏஐ ஆய்​வகம் உரு​வாக்​கப்​படும்.

ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்​ப​யிற்சி உள்​ளிட்ட துறை​களில் பயிற்சி வழங்​கப்​பட்​டு, பிற்​படுத்​தப்​பட்ட மக்​களின் சமூக, பொருளா​தார முன்​னேற்​றம் உறு​திப்​படுத்​தப்​படும். சிறு​பான்​மை​யினர் அதி​க​மாக வசிக்​கும் மாவட்​டங்​களில் திறன் மேம்​பாட்டு மையங்​கள் அமைக்​கப்​படும்.

வீட்டு மனையற்ற ஆதி​தி​ரா​விட, பழங்​குடி​யின குடும்​பத்​துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். பெண்​களுக்​கான தொழில் வாய்ப்​பு​களை பெருக்​கு​வதற்​கான திட்​டங்​கள் விரிவுபடுத்​தப்​படும்.

கிராம சந்​தைகள், விளை​யாட்​டு, நல்​வாழ்வு கட்​டமைப்​பு​கள் உள்​ளிட்ட சிறப்​பம்​சங்​கள் கொண்ட உத்​தமர் காந்தி மாதிரி கிராமங்​கள் திட்​டம் அமல்​படுத்​தப்​படும். முதல்​கட்​ட​மாக 10 ஊராட்​சிகளில் இப்​போதே இந்த திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

தொழில் துறை​யில் ரூ.18 லட்​சம் கோடி முதலீடு, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு, ஏற்​றுமதி 120 பில்​லியன் டால​ராக உயர்வு ஆகியவை எங்​கள் இலக்​கு. இதற்​காக மாவட்​டம்​தோறும் நவீன தொழிற்​பூங்கா அமைக்​கப்​படும். ஐடி ஏற்​றுமதி ரூ.6 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​பட்​டு, அத்​துறை​யில் 2 லட்​சம் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். ஜவுளித் தொழில் நவீனமய​மாக்​கப்​பட்​டு, திருப்​பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரம் உறு​திப்​படுத்​தப்​படும்.

உள்​நாட்டு மீன் உற்​பத்தி 4.50 லட்​சம் டன், பால் உற்​பத்தி 4.50 கோடி லிட்​டர், கால்​நடை எண்​ணிக்கை 3 கோடி​யாக உயர்த்​தப்​படும். ஒரு லட்​சம் ஏக்​கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்​யப்​படும்.

நகர்ப் பகு​தி​களில் 20 சதவீத பசுமைப் பகு​தி​கள், பூங்​காக்​கள் இருக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். கழி​வுநீரை முழு​மை​யாக சேகரித்​து, சுத்​தி​கரித்து 30 சதவீதம் மறுசுழற்சி செய்​யப்​படும்.

வெளி​நாட்டு வர்த்தக கண்​காட்​சிகளில், நமது சிறு, குறு தொழில் நிறு​வனங்​கள் பங்​கேற்க வழி​செய்​யப்​படும்.

நவீன தொழில்​நுட்​பங்​களின் உதவி​யால் பாலங்​கள், சாலைகளின் ஆயுள்​காலம் நீட்​டிக்​கப்​பட்​டு, விபத்​துகள் குறைக்​கப்​படும்.

நெசவுத் தொழிலில் புதிய தொழில்​நுட்​பங்​களை அறி​முகம் செய்​து, உற்​பத்​தியை அதி​கரித்​து, ஏற்​றும​திக்கு வாய்ப்பு ஏற்​படுத்தி தரப்​படும். எல்​லோருக்​கும் எல்​லாம் கிடைக்க வேண்​டும். அனைத்து மாநிலங்​களும் சுயாட்சி பெற வேண்​டும்.

நாடே சமத்​து​வபுர​மாக மாற வேண்​டும் என்​பது​தான் எனது மாபெரும் கனவு. நான் அறி​வித்த திட்​டங்​கள் செயல்​வடிவம் பெற மாவட்ட வாரி​யாக தனித்​தனி செயல் திட்​டங்​கள் வகுக்​கப்​படும். இதையெல்​லாம் நனவாக்​கி, 2030-ல் தமிழகம் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக உயர்த்​தப்​படும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில் அமைச்​சர்​கள் தங்​கம்​ தென்​னரசு, பழனிவேல்​ தி​யாகராஜன்​, தா.மோ.அன்​பரசன்​, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம்​ உட்​பட பலர்​ கலந்​துகொண்​டனர்​.

‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல்: ​முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மார்ச் 6 - அண்ணா ஆட்​சி​யில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967-ல் அண்ணா தலை​மையிலான அமைச்​சரவை பொறுப்​பேற்​று, தமிழகத்​தின் எழுச்​சிக்​கும், தமிழினத்​தின் மீட்​சிக்​கும் விதையூன்​றிய நாள்.

அடுத்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ‘ஸ்​டா​லின் ஸ்டேட்​மென்ட்’- ஐ இந்த நாளில் அறிவிக்​கிறேன். திராவிட ஆட்சி இந்த மண்​ணில் மையம் கொண்ட நாளி​லேயே ‘தி​ரா​விட மாடல் 2.0’-க்கு அடிக்​கல் நாட்​டு​கிறேன்.. உங்​கள் அனை​வரின் ஆதர​வோடும். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.</p></div>
காமேனியை கொல்ல புளூ ஸ்பேரோ ஏவுகணை வீசிய இஸ்ரேல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in