காமேனியை கொல்ல புளூ ஸ்பேரோ ஏவுகணை வீசிய இஸ்ரேல்

காமேனியை கொல்ல புளூ ஸ்பேரோ ஏவுகணை வீசிய இஸ்ரேல்
Updated on
2 min read

புதுடெல்லி: ஈ​ரான் உச்​சத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி, இஸ்​ரேல் படையைச் சேர்ந்த புளூ ஸ்பேரோ எனப்​படும் ஏவு​கணை மூலம், அழிக்​கப்​பட்ட விவரங்​கள் தற்​போது வெளி​யுல​கத்​துக்கு கசிந்​துள்​ளன.

அணு ஆயுத தடுப்பு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்​த​தால், அதன் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தன. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் ஈரான் உச்​சத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி​யின் அலு​வலக வளாகத்​தைக் குறி​வைத்​தும் சரமாரி​யாக குண்​டு​கள், ஏவு​கணை​கள் வீசப்​பட்​டன. இந்த தாக்​குதலில்​தான் காமேனி கொலை செய்​யப்​பட்​ட​தாகத் தகவல்​கள் வெளி​யாகின.

பல ஆண்​டு​களாக மிக சாதுர்​ய​மாக திட்​ட​மிடப்​பட்டு தாக்​குதலை இஸ்​ரேல் படைகள் அரங்​கேற்​றி​யுள்​ளன. இந்த திட்​டத்​தில், தீவிர கண்​காணிப்​பு, மேம்​படுத்​தப்​பட்ட ஏவு​கணை தொழில்​நுட்​பம், ஈரான் உச்​சத்தலை​வரின் தலை​வரின் நடமாட்​டம், டெஹ்​ரானில் தாக்​குதல் நடத்​து​வதுதன் துல்​லி​யத் தன்மை என பலவும் ஒருங்​கிணைந்து திட்​டம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

பிப்​ர​வரி 28-ம் தேதி அதி​காலை காமேனி, அவரது அலு​வல​கம் அமைந்​துள்ள டெஹ்​ரானிலுள்ள பாஸ்​டியர் சாலைக்கு வந்​துள்​ளார். அவர் உயர்​நிலைக் கூட்​டத்​தில் கண்​டிப்​பாக பங்​கேற்​கிறார் என்ற உளவுத் தகவல் கிடைத்த ஒரு சில வினாடிகளி​லேயே இலக்கை நோக்கி ஏவு​கணை​கள் வீசப்​பட்​டன. இதில்​தான் காமேனி உயி​ரிழந்​தார்.

இந்த தாக்​குதலை நடத்த இஸ்​ரேலால் பயன்​படுத்​தப்​பட்​டது புளூ ஸ்பேரோ ஏவு​கணை என்​கிற அதிநவீன ஏவு​கணை​யாகும். இஸ்​ரேலிய போர் விமானத்​திலிருந்து ஏவப்​பட்ட மிக​வும் அதிநவீன ஆயுத வகை​யைச் சேர்ந்​தது இது​வாகும். மேம்​படுத்​தப்​பட்ட பாது​காப்பு அமைப்​பி​னால் உரு​வாக்​கப்​பட்​டது​தான் இந்த புளூ ஸ்பேரோ ஏவு​கணை. இவை இஸ்​ரேலின் மிக​வும் மேம்​பட்ட பாலிஸ்​டிக் ஏவு​கணை​களின் குடும்​பத்​தைச் சேர்ந்​தவை​யாகும்.

இஸ்​ரேலின் விமானப்​படை​யிலுள்ள எஃப்​-15 போர் விமானத்​திலிருந்து புளூ ஸ்பேரோ ஏவப்​பட்​டுள்​ளது. இந்த புளூ ஸ்பேரோ ஏவு​கணை, விமானத்​திலிருந்து கிளம்பி முதலில் வளிமண்​டலத்​தின் விளிம்பை நோக்கி வேக​மாக உயர பறந்​துள்​ளது. அதன் பின்​னர் பிறகு செங்​குத்​தான பாதை​யில் அதன் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்​தில் பூமிக்​குத் திரும்பி இலக்கை அழித்​துள்​ளது.

நீல சிட்​டுக்​குருவி என்று அழைக்​கப்​படும் புளூ ஸ்பேரோ 3 வகைகளை உள்​ளடக்​கிய ஒரு பெரிய ஏவு​கணை குடும்​பத்​தைக் கொண்​டுள்​ளது. இவற்​றுக்கு பிளாக் ஸ்பேரோ, புளூ ஸ்பேரோ மற்​றும் சில்​வர் ஸ்பேரோ என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொன்​றும் சோதனை மற்​றும் போரின் நிலைக்கு ஏற்ப வெவ்​வேறு வகை பாலிஸ்​டிக் ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் வகை​யில் வடிவ​மைப்பு செய்​யப்​பட்​ட​வை​யாகும். ராக்​கெட்​டின் வேகத்​தில் சென்று தாக்​கும் தன்மை கொண்​ட​வை.

இந்த ஏவு​கணை சுமார் 6.5 மீட்​டர் நீளம் மற்​றும் தோராய​மாக 1,900 கிலோ எடை கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. இது கிட்​டத்​தட்ட 2,000 கிலோமீட்​டர் தூரம் கொண்ட இலக்​கை​யும் தாக்​கும் வல்​லமையை பெற்​றுள்​ளன. இவை தொலை​தூர இலக்​கு​களை​யும் துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும் அதீத திறன் பெற்​றவை​யாகும்.

புளூ ஸ்பேரோ ஏவு​கணை​யின் அதிவேக​மானது, வளிமண்​டலத்​துக்கு வெளியி​லிருந்து வரு​வ​தால் அதன் தொடக்க உயரம் மற்​றும் சூழ்ச்​சித்​திறன் ஆகிய​வற்​றின் காரண​மாக அதை எதிரி​நாடு​களால் இடைமறிக்க முடிவ​தில்​லை. எதிரி​நாடு​கள் சுதா​ரிப்​ப​தற்​குள் இவை தாக்​குதலை நடத்தி விடு​கின்​றன.

இஸ்​ரேல் நாட்​டின் சிக்​னல் புல​னாய்​வுப் பிரி​வான யூனிட் 8200, கிட்​டத்​தட்ட பல ஆண்​டு​களாக சேகரித்து வந்த உளவுத்​துறை தாக்​குதல்​களின்​ அடிப்​படை​யில்​ புளூ ஸ்பேரோ தாக்​குதல்​ கச்​சித​மாக நடந்​தேறி​ உள்​ளது.

காமேனியை கொல்ல புளூ ஸ்பேரோ ஏவுகணை வீசிய இஸ்ரேல்
மத்தியஸ்த முயற்சியை சில நாடுகள் தொடங்கியுள்ளதாக ஈரான் அதிபர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in