சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
Updated on: 
1 min read

சென்னை: சீர்காழி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் 11,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இவரது வெற்றியை எதிர்த்து வாக்காளர் வாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில் செல்வன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக வாக்காளர் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தேர்தல் வழக்கு தொடர்ந்த மனுதாரர், மனுவைத் திரும்பப் பெற முன்வந்ததால், ஆட்சேபனைகள் தெரிவிக்கவும், வேறு யாரேனும் வழக்கு தொடரவோ உயர் நீதிமன்றம் 15 நாட்கள் அவகாசம் வழங்குவது வழக்கம்.

செந்தில் செல்வன் வெற்றிக்கு எதிராக ஆட்சபனையோ, தேர்தல் வழக்கோ தொடர யாரும் முன்வராததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
வியூகத்தை மாற்றிய காங்கிரஸ் - டெல்லியில் ‘ஜனநாயகப் போராட்டம்’ நடத்துவதாக அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in