“இந்த தேர்தல் முடிவு தெரிந்ததுதான், ஆனால்...” - மு.வீரபாண்டியன் கருத்து

மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on: 
1 min read

சென்னை: “இந்த தேர்தல் முடிவு தெரிந்ததுதான். ஓர் அரசியலுக்காக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். தேர்தல் முடிவுகளை மதிக்கிறோம். எங்களுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.வீரபாண்டியன், ‘எங்களுக்கு மரணமும் கிடையாது; தோல்வியும் கிடையாது. தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டன. இடதுசாரிகள் ஓர் அரசியலுக்காக இயக்கம் நடத்தி வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். சாதி, மதம், பணம் ஆகியவற்றை முன்னிறுத்தித் தேர்தல் நடைபெறக்கூடாது.

இந்த தேர்தல் முடிவு தெரிந்ததுதான். ஓர் அரசியலுக்காக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். தேர்தல் முடிவுகளை மதிக்கிறோம். இடதுசாரிகளை சட்டமன்ற எண்ணிக்கையில் தேட வேண்டாம். எங்களுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது’ எனத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் என இடதுசாரிகள் தனித்து களம் இறங்கின. ஆனால் தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரிகள் இரு தொகுதிகளிலும் மிக சொற்பமான வாக்குகளையே பெற்றுள்ளது.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்</p></div>
மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்</p></div>
தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in