மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்குப் பதிவில், மதுராந்தகத்தில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80.25 சதவீத வாக்குகளும் பதிவாகின. மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதுராந்தகம் தொகுதியில் 22 சுற்றுகளாகவும், தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

முன்னணி நிலவரங்கள் காலை 11 மணியளவில் தெளிவாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைப் பெற ஆளும் கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களும் ஆதரவாளர்களும் பெரும் எதிர்பார்ப்போடு குவிந்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கொடைக்கானலில் 50 சென்ட் நிலத்தின் விற்பனை பத்திரம்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in