விஜய்

விஜய்

தவெக தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்தார் விஜய்!

Published on

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளனர். எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள்.

தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இவர்கள் செயல்படுவார்கள். குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதவ் அர்ஜூனாவும், சேலம் மாவட்டத்துக்கு அருண்ராஜ் உள்ளிடோரும் தேர்தல் கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>விஜய்</p></div>
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in