சேப்பாக்கம் தொகுதியில் ரூ.2.50 கோடி பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.2.50 கோடி பணத்தை பறக்​கும் படை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் நேற்று மாலை 5 மணி​யள​வில் சேப்பாக்கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​திக்கு உட்​பட்ட மயி​லாப்​பூர் டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை​யில் வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்போது, அந்த வழி​யாக வந்த வாக​னம் ஒன்றை மறித்து சோதித்​தனர். அதில், கட்​டுக்​கட்​டாக ரூ.2.50 கோடி பணம் இருந்​தது தெரிந்​தது. அதுகுறித்து விசா​ரித்​த​போது, அந்த பணம் ஏடிஎம் இயந்​திரங்​களில் நிரப்​புவதற்​காக கொண்டு செல்​லப்​பட்ட பணம் என வாகனத்​தில் இருந்​தவர்​கள் தெரி​வித்​தனர். ஆனால், பணத்​துக்​கான ஆவணங்​கள் அவர்​களிடம் இல்​லை.

இதையடுத்​து, அந்த பணத்தை பறி​முதல் செய்​து, வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். ரூ.1.91 கோடி பறிமுதல் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்​டத்​தில் உள்ள ஒவ்​வொரு சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கும் 3 பறக்​கும் படைகள் என்ற வீதம், 48 பறக்​கும் படைகளும், 3 நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற வீதம், 48 நிலை​யான கண்​காணிப்​புக் குழுக்களும் ஏற்​படுத்​தப்​பட்​டு, மூன்று சுழற்சி முறை​களில் பணி​களை மேற்​கொள்​வர்.

இந்த குழுக்​கள் தேர்​தல் விதி​மீறல்​கள் ஏதேனும் இருப்​பின் அவற்றை கண்காணிக்கும். அதன்படி, வாகன சோதனை​யின்​போது பறக்​கும் படை குழு​வால் உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரொக்​கப் பணம் மயிலாப்​பூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ரூ.75ஆயிரம் மற்​றும் நிலை​யான கண்​காணிப்​புக் குழு​வின​ரால் ராயபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ரூ.1.91கோடி என மொத்​தம் ரூ.1 கோடியே 91 லட்​சத்து 75ஆ​யிரம் ரொக்​கப் பணம் பறி​முதல் செய்​யப்​பட்டு கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பரந்தூர் விமான நிலையத் திட்ட நிலங்களில் சாகுபடி: நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in