கரூரில் கோயில் நிலங்களில் இருந்த தேர்தல் பணிமனைகள் அகற்றம்

கரூரில் அகற்றப்பட்ட தேர்தல் பணிமனை. | படம்: க.ராதாகிருஷ்ணன் |

கரூரில் அகற்றப்பட்ட தேர்தல் பணிமனை. | படம்: க.ராதாகிருஷ்ணன் |

Updated on
1 min read

கரூர்: கரூரில் 2 இடங்​களில் அமைக்​கப்​பட்​டிருந்த தேர்​தல் பணிமனை​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. கரூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் பல்​வேறு காலி இடங்​களில் தகரக் கொட்​டகைகள் அமைக்​கப்​பட்டு வந்​தன.

இதுகுறித்து பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, கரூர் தொகு​தி​யில் பல்​வேறு இடங்​களில் திமுக சார்​பில் மனிதபட்​டிகள் அமைக்​கப்​பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அதி​முக, பாஜக சார்​பில் தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், கரூரில் 100 இடங்​களில் மனித பட்​டிகள் அமைக்க திமுக திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்​போது 48 இடங்​களில் மனித பட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளதாக கரூர் ஆட்​சி​யர்ரவி​கு​மாரிடம் மார்ச் 20-ம் தேதி புகைப்​படங்​களு​டன் புகார் அளித்​தார். அப்​போது, கோயில் நிலங்​களி​லும் மனித பட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றம்​ சாட்​டி​னார்.

இந்​நிலை​யில், கரூர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலரும், கோட்​டாட்​சி​யரு​மான ச.சுந்​தர​ராமன் அறி​வுறுத்​தலின்​பேரில், கரூர் காதப்​பாறை மற்​றும் வெண்​ணெய்​மலை ஆகிய இடங்​களில் கோயில் நிலங்​களில் தகரக் கொட்​டகை​களில் அமைக்​கப்​பட்​டிருந்த தேர்​தல் பணிமனை​களை தொடர்​புடைய​வர்​களே நேற்று முன்​தினம் அகற்​றினர்​.

<div class="paragraphs"><p>கரூரில் அகற்றப்பட்ட தேர்தல் பணிமனை. | படம்: <em>க.ராதாகிருஷ்ணன்</em> |</p></div>
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in