

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலினை இன்று (11.09.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற சங்க தலைவர் பி.விஜயகுமார், செயலாளர் இ.அசோக்குமார், துணைத் தலைவர் எச்.கருணாகரன், துணைச் செயலாளர் ஏ.டி.கிஷோர் குமார், பொருளாளர் எம்.விஜயராகவன், இளநிலை செயற்குழு உறுப்பினர் கே.ரத்தினவள்ளி, சென்னை உயர் நீதிமன்ற இளநிலை செயற்குழு உறுப்பினர் வி.கார்த்திக் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வின் போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம் கவி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் என்.மருது கணேஷ், திமுக தலைமை வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.