திமுக சமூக வலைதள செயற்பாட்டாளரை ரிமாண்ட் செய்ய எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு

திமுக சமூக வலைதள செயற்பாட்டாளரை ரிமாண்ட் செய்ய எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: தவெக பெண் நிர்வாகியை இழிவாக பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சமூக வலைதள செயற்பாட்டாளரை, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ரிமாண்ட் செய்ய மறுத்து அவரை விடு வித்துள்ளது.

சென்னை, ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி லூர்து சகாயமேரி (42) குறித்து சமூக வலை தளத்தில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திமுக சமூக வலைதள செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் (35) என்பவரை கொளத்தூர் போலீ ஸார் நேற்று கைது செய் தனர். அவரை எழும்பூர் பெரு நகர 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாலை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சரண் ஜெய ராமன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.தாமோதரன், “மனுதாரருக்கு எதிரான இந்த வழக்கை போலீஸார் முழு மனதை செலுத்தி குற்றச்சாட்டுகளை பதியவில்லை. யாரையோ திருப்திபடுத்தும் நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

சமூக வலைதளத்தில் புகார் தாரர் அரசியல் ரீதியாக பதிவிட்ட பதிவுக்கு மனுதாரரும் பதிலளித்து பதிவிட்டுள்ளார். மனுதாரருக்கு எதிரான கைது நடவடிக்கையே தேவையற்றது எனும்போது, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க வேண்டிய கட்டாய சூழலும் இல்லை" என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, பெருநகர குற்றவியல் நடுவர் எஸ்.மும்தாஜ், போலீஸாரால் கைது செய்யப்பட்ட சரண் ஜெய ராமனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்து அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

திமுக சமூக வலைதள செயற்பாட்டாளரை ரிமாண்ட் செய்ய எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு
காஞ்சிபுரம்: கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் சிறப்பு ஹோமம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in