

காஞ்சிபுரம்: கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தல் நட்சத்திர கோயிலில் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு உலக நன்மைக்காகவும், பருவ மழை தடையின்றி பெய்து நீர்நிலைகள் நிரம்பவும், அனைத்து உயிரினங்களும் வளமான வாழ்க்கை வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த ஹோமம் கலச இதனைத் தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், வருண பெற்றன. பின்னர் வருண ஹோமம் ஆகியவை நடை பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி மஹா கணபதிக்கு அபிஷேக அலங்காரங்களும், மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.