வெப்ப அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

வெப்ப அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பிய சுற்​றறிக்கை விவரம்:

தமிழகத்​தில் நில​வும் வெப்ப அலை மற்​றும் அதிக வெப்​பநிலைச் சூழல்​களால் மாணவர்​களின் உடல்​நலன் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. எனவே, பள்ளி மாணவர்​களின் நலனை உறு​தி​செய்ய அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

இதுத​விர இந்​திய வானிலை ஆய்வு மையத்​தால் கடுமை​யான வெப்ப அலை என முன்​கூட்​டியே தெரிவிக்​கப்​பட்​டால், மாணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நலனை முன்​னிறுத்தி தேவை​யான அனைத்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும்.

மாவட்ட நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தல்​களின்​படி பள்​ளி​களுக்கு விடு​முறை அறி​வித்​தல் உள்​ளிட்ட நடவடிக்​கைகளை மேற்​கொள்ள தலை​மை​யாசிரியர்​கள் தயார்​நிலை​யில் இருக்க வேண்​டும்.

மாணவர்​களுக்கு போதிய குடிநீர் வசதி, நிழலான ஓய்​விட வசதி உட்பட வெப்ப அலைக்​கான பாது​காப்பு அம்​சங்​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​வதை அனைத்து முதன்​மைக் கல்வி அலு​வலர்​களும் உறு​தி​செய்ய வேண்​டும்​.

வெப்ப அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in