திருத்தணி கே.அரியின் கட்சிப் பதவி பறிப்பு: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

திருத்தணி கே.அரி

திருத்தணி கே.அரி

Updated on
1 min read

சென்னை: சி.வி.சண்முகம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த திருத்தணி கே.அரி கட்சிப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே, பெருமான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக கட்சிக்குள் பெறும் குழப்பம் வெடித்தது.

இதனிடையே, சி.வி.சண்முகம் தரப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த திருத்தணி கே.அரியின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:" அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திருத்தணி கோ.அரி, எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>திருத்தணி கே.அரி</p></div>
‘அங்கீகாரம்’ படத்துக்காக கோர்ட் வளாக செட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in