‘அங்கீகாரம்’ படத்துக்காக கோர்ட் வளாக செட்

‘அங்கீகாரம்’ படத்துக்காக கோர்ட் வளாக செட்
Updated on
1 min read

த​யாரிப்​பாளர் கேஜெஆர் ராஜேஷ், கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘அங்​கீ​காரம்’. ஜேபி. தென்​பா​தி​யான் இயக்​கும் இதில், சிந்தூரி விஸ்​வ​நாத், விஜி வெங்​கடேஷ், ஆண்டனி, ரங்​க​ராஜ் பாண்​டே, மன்​சூர் அலி​கான், மோகன்​ராம் மற்​றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்வஸ்​திக் விஷன்ஸ் சார்​பில் பிர​சாந்த் - அஜித் பாஸ்​கர் - அருண்​ முரு​கன் இணைந்து தயாரிக்​கின்​றனர். இதில், ஜிப்​ரான் இசையமைக்​கிறார். ஏ.விஸ்​வ​நாத் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இதன் டிரெய்​லர் வெளி​யாகி பாராட்​டுப் பெற்று வரு​கிறது.

“தடகள விளை​யாட்டை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இந்​தப் ​படம், விளை​யாட்டு வீரர்​களின் இன்​னல்​களை​யும், விளையாட்​டுத் ​துறை​யின் அவலங்​களை​யும் பேசும். இப்படத்துக்காக ரூ.75 லட்​சம் செல​வில் கோர்ட் வளாக செட் அமைக்​கப்​பட்டு படமாக்​கப்​பட்​டது. விரை​வில் இதன் வெளி​யீட்டு தேதி அறிவிக்​கப்​படும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

‘அங்கீகாரம்’ படத்துக்காக கோர்ட் வளாக செட்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in