கரூரை சேர்ந்த 18 பேர் சுயேச்சையாக போட்டி: கோவை தெற்கு தொகுதி நிலவரம் குறித்து அண்ணாமலை சந்தேகம்

கோவை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த பாஜக முன்​னாள்​ மாநிலத்​ தலை​வர் அண்​ணாமலை.

கோவை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த பாஜக முன்​னாள்​ மாநிலத்​ தலை​வர் அண்​ணாமலை.

Updated on
1 min read

கோவை: செந்​தில்​பாலாஜி போட்​டி​யிடும் கோவை தெற்கு தொகு​தி​யில் கரூரைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்​பாளர்​கள் ஏன் போட்​டி​யிட வேண்​டும் என அண்ணாமலை சந்​தேகம் கிளப்​பி​யுள்​ளார்.

பாஜக முன்​னாள் மாநிலத் தலைவர் அண்​ணா​மலை கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக தலை​மையிலான பாஜக கூட்​டணி 210 இடங்​களில் வெற்றி பெறும். கோவை, மதுரைக்​கு மெட்ரோ திட்டம் வராததற்கு தமிழக அரசு அளித்த வரைவு அறிக்​கை​தான் காரணம்.

40 கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தமிழ் படிக்க முடி​யும். தவறான செய்​தி பரப்ப வேண்​டாம். செந்​தில் பாலாஜி போட்​டி​யிடும் கோவை தெற்கு தொகு​தி​யில் சுயேச்சை வேட்​பாளர்​களாக கரூரைச் சேர்ந்த 18 பேர் மனு​தாக்​கல் செய்​துள்​ளனர்.

அவர்கள் மூலம் ஏஜெண்​டு​களை போட்​டுக் ​கொள்​ளலாம். பொருட்​களை இலவச​மாக வழங்​கலாம். வேட்​பாளர் என்ற பெயரில் சுயேச்​சைகளை களம் இறக்கி இங்​கிருக்​கும் அமை​தியை சீர்​குலைக்​கின்​றனர். கோவை தெற்கு தொகு​தியை தீவிர​மாக கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு புகார் அளிப்​போம்.

கோவை தெற்கு தொகு​தி​யில் திமுக​வினரே செந்​தில் பாலாஜியை தோற்​கடிப்​பார்​கள். செந்​தில்​பாலாஜி சகோ​தரர் அசோக், மாற்று வேட்​பாள​ராக கரூரில் போட்​டி​யிடு​கிறார். கோவைக்கு பாஜக எது​வும் செய்​ய​வில்லை என முதல்​வர் வந்​த​போது சொல்​கிறார்.

ஆனால் ரூ. 2,250 கோடி​யில் விமான நிலைய விரி​வாக்​கம், கோவை ரயில் நிலை​யம் சீரமைப்பு ரூ. 800 கோடி, கோவை போத்​தனூர் ரயில் நிலைய மேம்​பாடு ரூ.224 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்​டம், அம்​ரூத் திட்​டம், இஎஸ்ஐ, கோவை மாவட்​டத்​தில் 104 மலிவு விலை மருந்​தகம் என பல்​வேறு திட்​டங்​களை வழங்கி உள்​ளார்.

வரும் 23-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் எனது வீடு இருக்​கும் கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் வேட்​பாளர் பி.ஆர்​.ஜி.அருண்​கு​மாருக்​கு, பூத் ஏஜெண்​டாக வேலை பார்ப்​பேன்.

இந்தத் தேர்​தலில் எனக்கு கட்சி கொடுத்த வேலையை செய்​வேன். பாஜக சார்​பில் போட்​டி​யிடும் 27 பேர் உட்பட கூட்​ட​ணி​யினர் அனை​வரும் வெற்றி பெறவேண்​டும். பிரதமர் வரும் 15-ம் தேதி பிரச்​சா​ரத்​துக்​காக கன்​னி​யாகுமரிக்கு வரு​கிறார்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்​டி​யிட சீட் கேட்​க​வில்லை என்​பதே உண்​மை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோவை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த பாஜக முன்​னாள்​ மாநிலத்​ தலை​வர் அண்​ணாமலை.</p></div>
விஜய் வரவால் தே.ஜ.கூட்டணியின் வாக்கு வங்கியில் எந்த தாக்கமும் ஏற்படாது: மகாராஷ்டிரா முதல்வர் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in