சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Updated on
1 min read

சென்​னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரண​மாக, அண்​ணாநகர் உள்​ளிட்ட 3 மண்​டலங்​களில் சில இடங்​களில் நாளை குடிநீர் விநி​யோகம் நிறுத்​தப்​படும்.

இதுதொடர்​பாக, சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: அண்​ணாநகர் மண்​டலம், ஜவஹர்​லால் நேரு 200 அடி சாலை​யில் உள்ள நீர் கால்​வாய் சாலை மற்​றும் லூக்​காஸ் டிவிஎஸ் வீல்ஸ் இந்​தியா தொழிற்​சாலை சந்​திப்​பில் (பாடி மேம்​பாலம் அரு​கில்), மத்​திய பிர​தான குடிநீர் குழாய் இணைக்​கும் பணி​கள் நடை​பெற இருப்​ப​தால், 13-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 14-ம் தேதி காலை 10 மணி வரை திருவிக நகர், அம்​பத்​தூர், அண்​ணாநகர் ஆகிய 3 மண்​டலங்​களில் சில பகு​தி​களில் குழாய்​கள் மூலம் வழங்​கப்​படும் குடிநீர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்​படு​கிறது.

இதனால், திருவிக நகர் மண்​டலத்​தில் கொளத்​தூர், ஜவகர் நகர், செம்​பி​யம், அயனாவரம், பெரம்​பூர், அம்​பத்​தூர் மண்​டலத்​தில் கொரட்​டூர், அண்​ணாநகர் மேற்கு (விரி​வாக்​கம்), அண்​ணா நகர் மண்​டலத்​தில் வில்​லி​வாக்​கம், அண்​ணாநகர் மேற்கு ஆகிய பகு​தி​களில் குடிநீர் விநி​யோகம் நாளை நிறுத்​தப்​படும்.

எனவே, பொது​மக்​கள் முன்​னெச்​சரிக்​கை​யாக, வேண்​டிய அளவு குடிநீரை சேமித்து வைத்​துக்​கொள்ள வேண்​டும். அவசரத் தேவை​களுக்கு லாரி​கள் மூலம் குடிநீர் பெற்​றுக் கொள்ள வாரி​யத்​தின் https://cmwssb.tn.gov.in என்​ற இணை​யதள முகவரியை பயன்​படுத்​தி பதிவு செய்​து பெற்​றுக்​ கொள்​ளலாம்​. இவ்​​வாறு செய்​திக்​ குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி: 57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in