அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி: 57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்

அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி: 57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்
Updated on
2 min read

சென்னை: அரக்கோணம் யார்​டில் மறுசீரமைப்பு பணி நடக்​க​வுள்​ள​தால், 57 ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்​திக் குறிப்​பு: அரக்​கோணம் யார்​டில் மறுசீரமைப்பு பணி நடக்​க​வுள்​ள​தால், 57 ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது.

இதன்படி அரக்​கோணம் - திருத்​தணிக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 4, 5 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திருத்​தணி - அரக்​கோணத்​துக்கு இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திருத்​தணி - சென்னை சென்ட்​ரலுக்கு காலை 6.30 மணிக்கு இயக்​கப்​படும் மின்சார ரயில் ஆகிய 5 ரயில்​கள் ரத்து செய்​யப்படும்.

சென்னை சென்ட்​ரல் - திருச்​சானூருக்கு ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயில், திருச்​சானூர் - சென்னை சென்ட்​ரலுக்கு மேற்​படி நாட்​களில் மதி​யம் 1.30 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயில், அரக்​கோணம் - வேலூருக்கு மேற்​படி நாட்​களில் பிற்​பகல் 2.50 மணிக்​கும், வேலூர் - அரக்​கோணத்​துக்கு காலை 10 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரயிலும் ரத்து செய்​யப்படுகிறது.

பகுதி ரத்​து

சென்னை கடற்​கரை - அரக்​கோணத்​துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 4.05, மதி​யம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திரு​வாலங்​காடு - அரக்​கோணம் இடையே பகுதி ரத்து செய்​யப்படுகிறது.

சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணத்​துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை காலை 6.30, 9.10, 10.30, பகல் 11, நண்​பகல் 12.40, மதி​யம் 1.25, பிற்​பகல் 3.45, மாலை 4.45, 5.15, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், திரு​வாலங்​காடு - அரக்​கோணம் இடையே பகுதி ரத்து செய்​யப்படுகிறது.

அரக்​கோணம் - சென்னை சென்ட்​ரலுக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதி​காலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, பகல் 11.15, நண்​பகல் 12, மதி​யம் 1.40, பிற்​பகல் 2.25, 3.40, மாலை 4.50, 6, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்​கப்பட வேண்​டிய மின்​சார ரயில்​கள் பகுதி ரத்து செய்​யப்​படுகிறது.

இந்த ரயில்​கள், அரக்​கோணத்​துக்கு பதிலாக திரு​வாலங்​காட்​டில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு புறப்​பட்டு செல்​லும். இதுத​விர, அரக்​கோணம் - சென்னை கடற்​கரைக்கு மேற்​படி நாட்​களில் இயக்​கப்​படும் 4 மின்​சார ரயில்​களும் பகுதி ரத்து செய்​யப்​படுகிறது.

சென்னை சென்ட்​ரல் - திருத்​தணி இடையே மேற்​படி நாட்​களில் தலா இரண்டு மின்​சார ரயில்​களும் பகுதி ரத்து செய்​யப்படுகிறது. இவ்வாறு செய்​திக்​ குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி: 57 மின்​சார ரயில்களின் சேவையில் மாற்றம்
ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் ராஜ்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in