கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது
Updated on
1 min read

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கருணாநிதி புகைப்​படத்தை ஏந்தி பேரணி​யாகச் சென்ற மருத்​து​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தமிழக அரசு ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்​கத்​தொகை, முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆட்​சி​யில் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்​தல், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​குதல் உள்​ளிட்ட நீண்​ட​கால கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் கடந்த சில நாட்​களாக பல்​வேறு கட்ட போராட்​டங்​களை முன்​னெடுத்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நேற்று சென்னை ஓமந்​தூ​ரார் அரசு பன்​னோக்கு மருத்​து​வ​மனை வளாகத்​திலிருந்து மருத்துவர்கள் பிரம்​மாண்ட பேரணி​யைத் தொடங்​கினர்.

முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் புகைப்​படத்தை ஏந்​தி​யபடி அமை​தி​யாகச் சென்ற மருத்துவர்கள், அண்ணா சாலை​யில் உள்ள அவரது உரு​வச்​சிலை அருகே வந்​தடைந்​தனர்.

அப்​போது அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் மருத்​து​வர்​களைத் தடுத்து நிறுத்​தி, வலுக்​கட்​டாய​மாக வாக​னங்​களில் ஏற்றி கைது செய்​தனர். இதனால் அந்​தப் பகு​தி​யில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நில​வியது.

இதுகுறித்து கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன் மற்​றும் ராமலிங்​கம் கூறுகை​யில், “அரசுடன் நடத்​திய பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளின் போது எங்​களுக்​குப் பல வாக்​குறு​தி​கள் அளிக்​கப்​பட்​டன.

ஆனால், அவை இன்​று​வரை காகித அளவிலேயே உள்​ளன. எங்​களது நியாய​மான உரிமை​களுக்​காகவே நாங்​கள் போராடு​கிறோம். கருணாநிதி சிலை அருகே எங்​களை போலீ​ஸார் கைது செய்​திருப்​பது வருத்​தமளிக்​கிறது. கோரிக்​கைகள் நிறைவேறும் வரை எங்​களின்​ போ​ராட்​டம்​ ஓயாது'' என்​றனர்​.

கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது
எழும்பூர் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தற்கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in