விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி முக்கிய ஆலோசனை: அரசு நலத் திட்டங்கள் குறித்து விளக்கம்

தவெக தலை​வர் விஜய்​

தவெக தலை​வர் விஜய்​

Updated on
1 min read

சென்னை: தவெக தலை​வர் விஜய்​யுடன் அரசு உயர் அதி​காரி​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்​கத் தயா​ராகி வரும் நிலை​யில், தமிழக அரசின் உயர் அதி​காரி​கள் தவெக தலை​வர் விஜய்யை நேற்று பட்​டினப்​பாக்​கத்​தில் உள்ள அலு​வல​கத்​தில் சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

தொடர்ந்​து, நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் தமிழக தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர், உள்​துறைச் செயலர் மணி​வாசன் மற்​றும் பல்​வேறு முக்​கி​யத் துறைச் செயலர்​கள் பங்​கேற்​று, புதிய அரசு பொறுப்​பேற்​ப​தற்​கான நடை​முறை​கள் குறித்து விரி​வாக ஆலோ​சித்​தனர்.

அதன்​படி, ஆட்சி மாற்​றத்​துக்​கான முன்​னேற்​பாடு​கள், புதிய அரசு பதவி​யேற்பு விழாவுக்​கான பாது​காப்பு நெறி​முறை​கள் மற்​றும் நிர்​வாகக் கட்​டமைப்பு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. புதிய அரசு பொறுப்​பேற்​ப​தற்கு முன்​பாக மேற்​கொள்ள வேண்​டிய சட்​டப்​பூர்வ மற்​றும் நிர்​வாகச் செயல்​பாடு​கள் குறித்து தலை​மைச் செயலர் சாய் குமார் விளக்​கம் அளித்​தார்.

மகளிர் உரிமைத் தொகை: தொடர்ந்​து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான கால அட்​ட​வணை மற்​றும் தற்​போது நடை​முறை​யில் உள்ள மக்​கள் நலத் திட்​டங்​களை தடை​யின்​றித் தொடர்​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. பல்​வேறு துறைச் செயலர்​கள் தங்​கள் துறை​யின் தற்​போதைய செயல்​பாடு​கள் மற்​றும் நிலு​வை​யில் உள்ள திட்​டங்​கள் குறித்து விரி​வாக விளக்​கம் அளித்​தனர்.

மேலும், கடந்த திமுக ஆட்​சி​யில் மகளிர் உரிமைத் தொகை​யாக மாதம் ரூ.1,000 வழங்​கப்​பட்டு வந்​தது. தேர்​தல் கால சிறப்பு நிதி​யாக பிப்​ர​வரி முதல் ஏப்​ரல் வரை ரூ.5,000 வழங்​கப்​பட்​டிருந்த சூழலில், தவெக தனது தேர்​தல் வாக்​குறு​தி​யில் இத்​தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்​கு​வ​தாக அறி​வித்​திருந்​தது. அந்த வகை​யில், இந்த மாதத்​துக்​கான தொகையை தடை​யின்றி வழங்கு​வது குறித்​தும் அதி​காரி​களு​டன்​ விஜய்​ ஆலோசனை நடத்​தினார்​.

<div class="paragraphs"><p>தவெக தலை​வர் விஜய்​</p></div>
அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in