

திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2014-ல் 38,482 வாக்குகள் பெற்ற மாணிக்கம் தாகூரை 4 லட்சம் வாக்குகள் பெற வைத்து, ஒருமுறைக்கு இருமுறை வெற்றி தேடித்தந்தோம். பாஜகவை தேசம் முழுவதும் வீழ்த்திட காங்கிரஸ் என்கிற பேரியக்கம் தேவை என்பதால் தோழமையுடன் திமுக இணைந்து செயல்படுகிறது. தமிழக நலனுக்காக மட்டும் இல்லாமல் இந்திய நலனுக்காக காங்கிரஸை தொடர்ந்து ஆதரிக்கிறது. திமுக தோற்ற தொகுதிகளை எங்களுக்கே தரலாமே என சிலர் (மாணிக்கம் தாகூர்) கேட்கலாம்.
கடந்த 2024-ல் காங்கிரஸ் 400 தொகுதியில் போட்டியிட்டு, சுயேச்சையும் சேர்த்து நூறுதானே வந்தது. தோற்ற 300 ஐ இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் விட்டுத்தருமா என நாங்கள் கேட்கவில்லை.
மாநில அதிகாரத்துக்கு ஆசைப்படும் காலத்தில் மத்திய அதிகாரத்துக்கு திமுக, விசிக, மதிமுக ஆசைப்பட்டால் இந்தியா கூட்டணி என்ன ஆகும்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.