தமிழகத்தில் பாஜகவால் கொண்டு வரப்பட்டவர்தான் விஜய்: பரந்தாமன் குற்றச்சாட்டு

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்

Updated on: 
1 min read

சென்னை: “தமி​ழ​கத்​தில் திரா​விட இயக்​கத்​தின் சித்​தாந்​தத்​தைச் சிதைப்​ப​தற்​காகவே பாஜக​வால் கொண்​டு​வரப்​பட்ட ஒரு போர்வை​ தான் விஜய்” என திமுக சட்​டத்​துறை இணைச் செயலாளர் இ.பரந்​தாமன் தெரி​வித்​தார்.

மது​ராந்​தகம். தாராபுரம் தொகு​தி​ திமுக வேட்​பாளர்​களான பரந்தாமன் மற்​றும் சுகன்யா ஆகி​யோர் சென்​னை​யில் திமுக தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்டாலினை சந்​தித்​தனர்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் பரந்​தாமன் கூறிய​தாவது: வெற்றி பெற்​று​விட்​டோம் என்ற மமதை​யில் தலை​மைச்​செயலக அறைக்குள் அமைச்​சர்​கள் செய்​கின்ற செயல்​கள் அநாகரீகத்​தின் உச்​ச​மாகும். வாக்​குக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்​கப்​பட்​ட​தாக கிராமங்​களைக் குறிப்​பிட்டு மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் கனகராஜ் பகிரங்​க​மாகச் சவால் விட்​டதை வைகோ பார்க்க வேண்​டும். இந்​தத் தேர்​தலே குதிரைப்​பேரத்​தால் மக்​கள் மீது திணிக்​கப்​பட்ட தேர்​தல் என்று அனைத்​துக் கட்​சிகளுமே கூறி வருகின்​றன.

இன்​னும் 15 எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்​யப் போவ​தாக ஆதவ் அர்​ஜுனா கூறு​வது அவர்​களின் நோக்​கத்​தைக் காட்டுகிறது. தமி​ழ​கத்​தில் திரா​விட இயக்​கத்​தின் சித்தாந்தத்தைச் சிதைப்​ப​தற்​காகவே பாஜக​வால் கொண்​டுவரப்பட்​ட​வர்​ தான் விஜய்​. அவர்​ தனிப்​பெரும்​ அரசி​யல்​ ஆளுமை​யால்​ வரவில்​லை, இதற்​குப்​ பின்​​னால்​ ​பாஜக​வின்​ மூளையே செயல்​படு​கிறது. இவ்​​வாறு பரந்தாமன் தெரிவித்​​தார்​.

<div class="paragraphs"><p>திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</p></div>
ஊதிய உயர்வுக்கு ஏற்ப டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளக் கணக்கு மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in