எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி; வெளிநடப்பு - முதல்வர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி; வெளிநடப்பு - முதல்வர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் பேச்​சுக்கு எதிர்ப்பு தெரி​வித்​ததுடன், பேச வாய்ப்பு அளிக்​காததைக் கண்​டித்து திமுக​வினர் நேற்று அமளி, தர்​ணா​வில் ஈடு​பட்​டதுடன், வெளிநடப்​பும் செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு பதிலளித்​துப் பேசிய முதல்​வர் விஜய், திமுக மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கடுக்​காக முன்​வைத்​தார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக​வினர் எழுந்து நின்​றனர்.

கோஷங்​களை எழுப்பி அமளி​யில் ஈடு​பட்​டனர். முதல்​வர் விஜய் பேசி முடித்த உடன், திமுக மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு பதில் அளிக்​கும் வகை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லினை பேச அனு​ம​திக்​கும்​படி கேட்​டனர்.

ஆனால், பேர​வைத்​தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் மறுத்​து​விட்​டார். மேலும், ‘முதல்​வர் பேச​வில்​லை... பேச​வில்​லை... என்று கூறினீர்​கள். அவர் இப்​போது பேசும்​போது அமை​தி​யாகக் கேட்​டிருக்க வேண்​டும். அவர் பேசி முடித்த பின்​னர் உங்​களுக்கு பதில் அளிக்க அவகாசம் கொடுத்​திருப்​பேன்.

ஆனால் அவர் பேசுவது மக்​களுக்கு போய் சேரக்​கூ​டாது என்​ப​திலேயே நீங்​கள் (திமுக​வினர்) குறி​யாக இருந்து கூச்​சல் குழப்​பங்​களில் தொடர்ந்து ஈடு​பட்​டீர்​கள். எனவே, பேச வாய்ப்பு அளிக்க முடி​யாது. மிரட்​டி​னாலும் உருட்​டி​னாலும் நான் அனு​மதி தர மாட்​டேன். என்னை யாரும் நிர்​பந்​திக்க முடி​யாது” என்​றார்.

அப்​போது திமுக எம்​எல்​ஏக்​கள் அவை​யின் மையப் பகு​திக்கு வந்து பேர​வைத்​தலை​வர் இருக்​கையை முற்​றுகை​யிட்​டதுடன், பேர​வைத்​தலை​வர் இருக்கை முன்பு அமர்ந்து தர்​ணா​விலும் ஈடு​பட்​டனர். மேலும், பதாகைகளை​யும் கையில் ஏந்தி இருந்​தனர்.

இதையடுத்​து, அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கும்​படி பேர​வைத் தலை​வரிடம், அவை முன்​னவர் அமைச்​சர் செங்​கோட்​டையன் 2 முறை கோரிக்கை விடுத்​தார். ஆனாலும், திமுக​வினர் தொடர்ந்து கோஷம் எழுப்​பிய​வாறு இருந்​தனர்.

இதையடுத்​து, பேர​வைத் தலை​வர், “பேச அனு​ம​திக்க மாட்​டேன், நீங்​களாக வெளியே செல்ல வேண்​டும் என்​றால் செல்​லலாம், இல்​லா​விட்​டால் அவைக் காவலர்​களை வைத்து வெளி​யேற்​றப்​படு​வீர்​கள்” என்று கூறி அவை காவலர்​களை​யும் அழைத்​தார்.

அப்​போது, எதிர்க்​கட்சி தலை​வர் பேச அனு​ம​திக்​கும்​படி முதல்​வர் விஜய் கூறி​னார். இதைத்​தொடர்ந்​து, தர்​ணா​வில் ஈடு​பட்ட திமுக​வினர் எழுந்து அவர​வர் இருக்​கைக்கு சென்​றனர்.

சில திமுக எம்​எல்​ஏக்​கள் பேர​வைத் தலை​வரைப் பார்த்து சில கருத்​துகளை தெரி​வித்​தனர். இதைக் கவனித்த பேர​வைத் தலை​வர், எதிர்​கட்​சி​யினருக்கு பேச வாய்ப்பு தர முடி​யாது என்று திட்​ட​ வட்​ட​மாகத் தெரி​வித்​தார். இதையடுத்​து, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்​ தலை​மை​யில்​ தி​முக எம்​எல்​ஏக்​கள்​ வெளிநடப்​பு செய்​தனர்​.

எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி; வெளிநடப்பு - முதல்வர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
எம்எல்ஏ வாகனப் படி, தனி அலுவலர் பதவிக் காலம், ‘வாட்’ வரி தொடர்பாக 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in