போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.

போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.

வட மாநிலங்களில் ஏலக்காய் விற்பனை மூலம் திமுக நிர்வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

Published on

போடி: வட மாநிலங்​களில் உரிய ஆவணங்​களின்றி ஏலக்​காய் விற்​பனை செய்​ததன் மூலம், போடி திமுக நிர்​வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்​ததற்​கான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தேனி மாவட்​டம் போடி நகராட்​சித் தலை​வ​ராக இருப்​பவர் ராஜ ராஜேஸ்​வரி. இவரது கணவர் சங்​கர். திமுக மாநில செயற்​குழு உறுப்​பின​ராக​வும், போடி 29-வது வார்டு கவுன்​சில​ராக​வும் உள்​ளார். இவர் ஏலக்​காய் வர்த்தக நிறு​வன​மும் நடத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில், வட மாநிலங்​களுக்கு பல டன் ஏலக்​காய் அனுப்​பிய​தில் வரி ஏய்ப்​புச் செய்​த​தாக சங்​கர் மீது புகார் எழுந்​தது. இதையடுத்​து, கடந்த 6-ம் தேதி அவருக்​குச் சொந்​த​மான கிடங்​கு, அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை, வரு​மானம் மற்​றும் வணி​கவரித் துறை​யினர் விசா​ரணை நடத்​தினர். இதில் பல்​வேறு ஆவணங்​கள் கைப்​பற்​றன. தொடர்ந்​து, சங்​கர், ராஜ ராஜேஸ்​வரி, அவர்​களது​மகன் லோகேஷ் ஆகியோரிடம் விசா​ரணை நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், சங்​கருடன் நெருங்​கிய தொடர்​பில் உள்ள தனி​யார் பள்​ளித் தாளாளர் வேதாஜெய​ராஜ், கவுன்​சிலர் முரு​கேசன், முன்​னாள் நகராட்சி தலை​வரும், ஓபிஎஸ் அணி​யைச் சேர்ந்​தவரு​மான பழனி​ராஜன், சங்​கரின் கார் ஓட்​டுநர் வடிவேலு உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்​டோரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டது.

கடந்த 7 மாதங்​களில் நடந்த வங்​கிப் பரிவர்த்​தனை, பணப் பரி​மாற்​றம், ஏலக்​காய்​கள் அனுப்​பப்​பட்ட நிறு​வனங்​கள் உள்​ளிட்டவிவரங்​களை​யும் அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்​துள்​ள​தாக​வும், இதற்​கான ஆவணங்​களும், சாட்​சிகளும் சரி​யாக இருப்​ப​தால் விரை​வில் கைது நடவடிக்கை இருக்​கலாம் என்​றும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.</p></div>
திருபுவனம் பாமக நிர்வாகி கொலை வழக்கு: பள்ளி​கொண்டா சுங்கச்சாவடியில் 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in