திரு​புவனம் பாமக நிர்​வாகி ராமலிங்​கம் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களை பள்​ளி​கொண்டா காவல் நிலை​யத்​துக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்ற போலீ​ஸார்.  படம்: வி.எம்.மணிநாதன்

திரு​புவனம் பாமக நிர்​வாகி ராமலிங்​கம் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களை பள்​ளி​கொண்டா காவல் நிலை​யத்​துக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்ற போலீ​ஸார்.  படம்: வி.எம்.மணிநாதன்

திருபுவனம் பாமக நிர்வாகி கொலை வழக்கு: பள்ளி​கொண்டா சுங்கச்சாவடியில் 4 பேர் கைது

என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை
Published on

வேலூர்: திரு​புவனம் பாமக நிர்​வாகி ராமலிங்​கம் கொலை வழக்​கில் தொடர்​புடைய 4 பேர் வேலூர் மாவட்​டம் பள்​ளி​கொண்டா சுங்​கச்​சாவடி​யில் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​புவனத்​தைச் சேர்ந்த பாமக நிர்​வாகி ராமலிங்​கம் 2019-ல் படு​கொலை செய்​யப்​பட்​டார். மதமாற்​றத்​தைக் கண்​டித்​த​தால் அவர் கொலை செய்​யப்​பட்​ட​தாக​வும், தடை செய்​யப்​பட்ட பாப்​புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்​தியா அமைப்​புக்கு இதில் தொடர்பு இருப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் 12 பேர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மேலும் சிலர் தேடப்​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய 2 பேர் கிருஷ்ணகிரி வழி​யாக சென்​னைக்கு காரில் செல்​வ​தாக மத்​திய நுண்​ணறி​வுப் பிரிவுக்கு (ஐ.பி.) ரகசிய தகவல் கிடைத்​து உள்ளது.

இதையடுத்​து, வேலூர் மாவட்​டம் பள்​ளி​கொண்டா சுங்​கச்​சாவடி​யில் ஐ.பி. மாநில சிறப்பு நுண்​ணறி​வுப் பிரிவு (எஸ்​ஐ​யு) அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் நேற்று கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர். அப்​போது, சந்​தேகப்​படும் வகை​யில் சென்ற காரை சுற்றி வளைத்த போலீ​ஸார், அதிலிருந்த 4 பேரை பள்​ளி​கொண்டா காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில் அவர்​கள் பாமக நிர்​வாகி ராமலிங்​கம் கொலை​யில் தொடர்​புடைய தஞ்​சாவூர் மாவட்​டம் வடக்கு மாங்​குடி பள்ளி வாசல் தெரு​வைச் சேர்ந்த புர்​ஹானு​தின் (33), திரு​விடைமருதூர் திரு​மங்​கலம்​குடியைச் சேர்ந்த முகமது நபீல் ஹசன் (34) என்​பது தெரிய​வந்​தது. காரை ராணிப்​பேட்டை மாவட்​டம் நெமிலி அடுத்த அசநெல்லி குப்​பம் கிராமத்​தைச் சேர்ந்த அப்​பாஸ் (30) ஓட்​டிவந்​தார். இவர் எஸ்​டிபிஐ கட்​சி​யின் உறுப்​பினர். இவருடன் வந்​தவர் அதே கிராமத்​தைச் சேர்ந்த முகமது இம்​ரான் (33) என்​பதும் தெரிய​வந்​தது.

தொடர்ந்​து, வேலூர் எஸ்​.பி. மயில்​வாக​னன் நால்​வரிட​மும் விசா​ரணை மேற்​கொண்​டார். பின்​னர், நால்​வரும் என்ஐஏ அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். அவர்​கள் 4 பேரை​யும் கைது செய்த என்ஐஏ அதி​காரி​கள், தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அவர்​கள் வந்த காரை​யும் அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

<div class="paragraphs"><p>திரு​புவனம் பாமக நிர்​வாகி ராமலிங்​கம் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களை பள்​ளி​கொண்டா காவல் நிலை​யத்​துக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்ற போலீ​ஸார்.&nbsp; படம்: வி.எம்.மணிநாதன்</p></div>
நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in