சூரியக் கட்சி - கதர் பார்ட்டி ‘டீல்’ நிலவரம் என்ன? | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சி - கதர் பார்ட்டி ‘டீல்’ நிலவரம் என்ன? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சூரியக் கூட்டணியில் நீடிப்போமா சூப்பர் ஆக்டர் பக்கம் ஒதுங்குவோமா என்று தெரியாமல் கதர் கட்சி தானும் கதறி கூட்டணியில் இருக்கும் மற்றவர்களையும் கதறவிட்டுக் கொண்டிருக்க, டெல்லி சின்னவரின் பெயரைச் சொல்லி இந்த நேரத்திலும் ‘கை’ பார்ட்டிகள் சிலர் கைங்கர்யம் காட்டி விட்டார்களாம். இம்மாத இறுதிக்குள் சூரியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துவிடும்.

அடுத்த மாதம் 5-ம் தேதி டெல்லி சின்னவர் சென்னை வருகிறார். சென்னையில் அவரும் சூரியக் கட்சி கூட்டணித் தலைவர்களும் மேடையில் ஒன்றாக பிரசன்னமாவார்கள் என கதர் கட்சி தரப்பில் ஒரு தகவல் பரவியது. இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்திக் காட்ட வேண்டும் என கதர் பார்ட்டியின் ‘வெல்த்’ தலைவர் கட்டளை போட்டிருந்தாராம்.

இதுதான் சாக்கு என்று, “சின்னவர் வருகிறார்... சிறப்பா செஞ்சுவிடுங்க” என்று சொல்லி கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் பெருந்தொகையை வசூல் போட்டுவிட்டார்களாம். “மேடையில் உங்களுக்கும் ஒரு இடமுண்டு” என்று சொல்லி தனியாகவும் சிலரிடம் தேட்டம் போட்டார்களாம். இவர்களில் சிலர் வேட்பாளர் கனவிலும் இருப்பதால் தட்டமுடியாமல் கேட்டதை ‘எண்ணிக்’ கொடுத்தார்களாம்.

இவ்வளவும் நடந்த பிறகு, “இன்னும் சூரியக் கட்சியுடன் சுமுகப் பேச்சை எட்டவில்லை. அதனால் சின்னவரின் சென்னை வருகை இப்போதைக்கு இருக்காது” என்று கூலாகச் சொல்கிறார்களாம். இதனால், கேட்டதும் கல்லாவைத் திறந்த சிலர், சின்னவர் பெயரில் இப்படி கலெக்‌ஷன் மேளா நடத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி சுல்தான் பேட்டைக்கு சூடுபறக்க புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்.

சூரியக் கட்சி - கதர் பார்ட்டி ‘டீல்’ நிலவரம் என்ன? | உள்குத்து உளவாளி
விசில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நிலவரம் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in