“மாதவரத்தில் 10 ஆண்டுகளில் 5,551 பணிகள் நிறைவேற்றம்” - ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரச்சாரம்

மாதவரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.

மாதவரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.

Updated on
2 min read

சென்னை: மாதவரம் தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட்​டு, கடந்த 2016 மற்​றும் 2021 என தொடர்ச்​சி​யாக இரு​முறை வெற்றி பெற்று எம்​எல்​ஏ​வாக பதவி வகிப்​பவர் எஸ்​.சுதர்​சனம். தற்​போது 3-வது முறை​யாக ‘ஹாட்​ரிக்’ சாதனை படைக்​கும் முனைப்​பில் தேர்​தல் களத்​தில் தீவிர​மாக பணி​யாற்றி வரு​கிறார்.

மாதவரம் தொகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக நிறைவேற்​றிய திட்​டங்​கள் குறித்து பிரச்​சா​ரத்​தின்​போது விளக்​கிப் பேசி வரு​கிறார்.

அவர் கூறிய​தாவது: கடந்த 10 ஆண்​டு​களில் மாதவரம் தொகு​தி​யில் கல்​வி, சுகா​தார மேம்​பாட்டு வசதி​கள், குடிநீர், தெரு​விளக்​கு​கள், கழி​வுநீர் கால்​வாய், மழைநீர் கால்​வாய், பேருந்து நிலை​யம், பட்​டா, கட்​டமைப்பு வசதி​கள் என பல கோடி ரூபாய் செல​வில் 5,551 பணி​களை செயல்​படுத்தி உள்​ளேன். ரூ.91.30 கோடி​யில் தணி​காசலம் நகர் கால்​வாய் நீர்​வழித் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

கடப்​பாக்​கம் ஏரி ரூ.58 கோடி​யிலும், இரட்டை ஏரி ரூ.47 கோடி​யிலும், பால் பண்ணை ஏரி ரூ.15 கோடி​யிலும் சீரமைக்​கப்​பட்​டு, படகு சவாரி​யுடன் கூடிய சுற்​றுச்​சூழல் பொழுது​போக்கு பூங்​கா​வாக மாற்​றப்​பட்​டுள்​ளன.

வடபெரும்​பாக்​கத்​தில் ரூ.22.40 கோடி​யில் உயர்​மட்​டப் பாலம் கட்​டப்​பட்​டுள்​ளது. ரூ.15 கோடி​யில் கொசஸ்​தலை ஆற்​றின் கரையோரம் பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. புழல் காந்தி தெரு​வில் உள்ள சென்னை மாநக​ராட்​சிப் பள்​ளிக்கு ரூ.12.39 கோடி​யில் புதிய வகுப்​பறை கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது.

தொகு​தி​யில் 30 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களுக்கு பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது. 300-க்​கும் மேற்​பட்ட மின்​மாற்​றிகள், 800-க்​கும் மேற்​பட்ட பழைய மின் விளக்​கு​களை மாற்​றிக் கொடுத்​துள்​ளேன். 2 ஆயிரம் பேருக்கு எனது சொந்த செல​வில் தையல் இயந்​திரங்​கள் வழங்கி பெண்​களை சுயதொழில் முனை​வோ​ராக மாற்​றி​யுள்​ளேன்.

பால​வேடு கிராம செல்​லி​யம்​மன் குளத்தை மேம்​படுத்​திக் கொடுத்​துள்​ளேன். 25-வது வார்டு கிளை நூல​கத்​தில் 60 ஆயிரம் புத்​தகங்​களை வைக்க அலமாரி அமைத்​துக் கொடுத்​துள்​ளேன்.

தற்​போது ரூ.406 கோடி​யில் பாதாள சாக்​கடை திட்​டப் பணிகள் நடந்து வரு​கின்​றன. மாத்​தூர் எம்​எம்​டிஏ 2-வது பிர​தான சாலை​யில் ரூ.12 கோடி செல​வில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்​கப்​பட்டு வரு​கிறது. ரூ.2.40 கோடி​யில் செங்​குன்​றத்​தி​லும், ரூ.11 கோடி​யில் பாடிய நல்​லூரிலும் புதிய பேருந்து நிலை​யங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

ஒரு​முறை​கூட சட்​டப்​பேர​வை​யில் நான் விடுப்பு எடுத்​தது இல்​லை. இதற்​காக சிறந்த எம்​எல்ஏ என்ற பெயரை​யும் பெற்​றுள்​ளேன். 3-வது முறை வெற்றி பெற்​றதும், மாதவரம் ரவுண்​டானா புதிய பேருந்து நிலை​யம் முதல் சோழ​வரம் சுங்​கச்​சாவடி வரை போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்க ரூ.1,900 கோடி செல​வில் புதிய உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​படும்.

மாதவரம் பால் பண்ணை பகு​தி​யில் 450 ஏக்​கர் பரப்​பில் டைடல் பார்க், 22 ஏக்​கரில் சித்த மருத்​து​வப் பல்​கலைக்​கழகம் அமைக்​கப்​படும். மாதவரம் வரை அமைக்​கப்​பட்​டுள்ள மெட்ரோ ரயில் வழித்​தடத்தை சாத்​தாங்​காடு வழி​யாக திரு​வொற்​றியூர் வரை​யிலும், சோழ​வரம் நல்​லூர் வரை​யிலும் நீட்​டிக்க முயற்சி எடுப்​பேன்.

புழல் ஏரி​யின் அழகை கண்டு ரசிக்​க​வும், நடைப​யிற்சி மேற்​கொள்​ள​வும் 2.5 கிமீ தூரத்​துக்கு நடை​பாதை அமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

மக்​களின் கோரிக்​கைகள்

மாதவரம் தொகு​தி​யில் வடமாநில லாரி போக்​கு​வரத்து அதி​க​மாக இருப்​ப​தால் மஞ்​சம்​பாக்​கம்​போல மற்​றொரு இடத்​தில் லாரி நிறுத்​து​மிடம் அமைக்க வேண்​டும். மாதவரத்​தில் இருந்து அதிக எண்​ணிக்​கை​யில் மாநகர், புறநகர் பேருந்​துகளை இயக்க வேண்​டும். ஆந்​திர பேருந்​துகள் நிற்​கும் இடத்தை மேம்​படுத்த வேண்​டும்.

நீண்ட கால​மாக நடந்து வரும் மெட்ரோ ரயில் பணி​களை விரை​வாக முடிக்க வேண்​டும். மாதவரத்​தில் உள்ள குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்தை தரம் உயர்த்தி அமர்வு நீதி​மன்​றமாக கொண்​டுவர வேண்​டும்.

கொசுத் தொல்​லைக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் பாதாள சாக்​கடை திட்​டத்தை விரிவுபடுத்த வேண்​டும். பல்​வேறு பகு​தி​களில் நில​வும் குடிநீர் தட்​டுப்​பாட்டை போக்கி சுத்​த​மான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தொகுதி மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>மாதவரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.</p></div>
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in