கும்மிடிப்பூண்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பெருமிதம்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பெருமிதம்
Updated on
2 min read

கும்​மிடிப்​பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக தற்​போதைய எம்​எல்​ஏ-​வான டி.ஜெ.கோ​விந்​த​ராஜன் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். இவர், கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் கடந்த 5 ஆண்​டு​களாக நிறைவேற்​றிய திட்​டங்​கள் குறித்​தும், திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​கள் குறித்​தும் பொது​மக்​களிடையே எடுத்​துரைத்​து, தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

இதுகுறித்​து, டி.ஜெ.கோ​விந்​த​ராஜன் கூறிய​தாவது: கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில், பெரிய​பாளை​யம் அருகே ஆரணி ஆற்​றின் குறுக்கே காரணி, புதுப்​பாளை​யம் ஆகிய கிராமங்​களை​யும், அஞ்​சாத்​தம்​மன் கோயில் பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் உயர்​ மட்ட பாலம் அமைக்க வேண்​டும் என பொது​மக்​கள் 60 ஆண்டு கால​மாக வைத்த கோரிக்​கை​யை, ரூ.20 கோடி மதிப்​பில் உயர்​மட்ட பாலம் அமைத்து நிறைவேற்​றி​யுள்​ளோம்.

ஊத்​துக்​கோட்​டை, கும்​மிடிப்​பூண்டி பேரூராட்​சி, பாத்​த​பாளை​யம் ஊராட்​சிப் பகு​தி​களில் ரூ.21 கோடி மதிப்​பில் 5 உயர் மட்ட பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கவரைப்​பேட்டை முதல் சத்​தி​ய​வேடு வரை இரு​வழிப் பாதை ரூ.72 கோடி செல​வில் நான்​கு​வழிப் பாதை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

கே.எஸ்​.ரோடு முதல் மாநெல்​லூர் சிப்​காட் வரை ரூ.55 கோடி செல​வில் அணுகு சாலை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. ஒருங்​கிணைந்த சாலை கட்​டமைப்பு திட்​டத்​தின்​கீழ் கும்​மிடிப்​பூண்டி பேரூ​ராட்​சி​யில் ரூ.5 கோடி மதிப்​பில் சாலை​யின் இரு​புற​மும் கால்​வாய் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

கும்​மிடிப்​பூண்டி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் ரூ.60 லட்​சம் மதிப்​பில் ரத்த சுத்​தி​கரிப்பு நிலை​யம், ரூ.17.58 லட்​சம் மதிப்​பில் நவீன டிஜிட்​டல், எக்ஸ்ரே இயந்​திரம் அமைக்​கப்​பட்​டுள்​ளன; ஈகு​வார்​பாளை​யத்​தில் ரூ.40 லட்​சம் மதிப்​பில் புதிய கால்​நடை மருத்​து​வ​மனை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சிறு​புழல் பேட்டை குரு​வாட்​டுச்​சேரி, ஓபச​முத்​திரம், சித்​த​ராஜ கண்​டிகை பகு​தி​களில் ரூ.61 லட்​சம் மதிப்​பில் குடிநீர் சுத்​தி​கரிப்பு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல், என் சொந்த பணத்​தில் தொகுதி மக்​களுக்கு பல்​வேறு உதவி​களைச் செய்து வரு​கிறேன்.

குறிப்​பாக, 2021 ஜூன் முதல் கும்​மிடிப்​பூண்டி அரசு மருத்​து​வ​மனை மற்​றும் ஊத்​துக்​கோட்டை அரசு மருத்​து​வ​மனை​களில் பணிபுரி​யும் தற்​காலிக பணி​யாளர்​கள் 12 பேருக்கு மாதம் ரூ.1.07 லட்​சம் ஊதி​யம் வழங்கி வரு​கிறேன்.

எம்​பிபிஎஸ் மற்​றும் பிடிஎஸ் படிக்​கும் 6 மாணவ-​மாண​வியருக்கு ஆண்​டு​தோறும் ரூ.2 லட்​சம் நிதி உதவியளித்து வரு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

மக்​களின் கோரிக்​கைகள்

கும்​மிடிப்​பூண்டி மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் காற்​று, நிலத்​தடி நீரில் அதிக மாசு ஏற்​பட்டு வரு​வதற்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவேண்​டும்.

கும்​மிடிப்​பூண்டி பகு​தி​யில் விபத்து மற்​றும் அவசர சிகிச்சை மையம், படுக்கை வசதி​யுடன் கூடிய இஎஸ்ஐ மருத்​து​வ​மனை, அரசு கலைக்​கல்​லூரி, மாநகர போக்​கு​வரத்​துக்​கழக பணிமனை ஆகியவை அமைக்​கவேண்​டும்.

கும்​மிடிப்​பூண்​டி, மாதர்​பாக்​கம் பேருந்து நிலை​யங்​களை மேம்​படுத்த வேண்​டும். நிரந்தர நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள், சேமிப்பு கிடங்​கு​கள் அமைக்க வேண்​டும், நீர் நிலைகளை முறை​யாக தூர்​வாரி பாது​காக்​கவேண்​டும், பெரிய அளவி​லான மாம்பழ கூழ் தொழிற்​சாலை அமைக்​கவேண்​டும் என பொது​மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பெருமிதம்
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in