புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பே வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக!

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே திமுகவினர் வேட்புமனு தாக்கலை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதிப் பங்கீடும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக்கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அத்துடன், கடந்த தோ்தலில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட்டு, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதனால் இந்த முறை திமுக 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரஸிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், புதுச்சேரி மாநில வேட்பாளர்கள் நோ்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று நடத்தி முடித்தார்.

மேலும், திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அனைத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் கட்சியின் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. தொகுதிகளும் இறுதியாகாத நிலையில, திமுகவினர் கட்சியின் அறிவுறுத்தலின்பேரில் வேட்பு மனு தாக்கலைத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக எம்எல்ஏவாக இருக்கும் சம்பத், மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சாரம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனு தாக்கலை சம்பத் தாக்கல் செய்தார்.

இது குறித்து சம்பத் எம்எல்ஏவிடம் கேட்டபோது, “வேட்பு மனு தாக்கல் செய்ய நாட்கள் குறைவாக உள்ளது. மேலும் இன்று நல்ல நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி இறுதியாகும் பட்சத்தில் தலமை என்ன சொல்கிறதோ, அதனை கேட்டு நடப்போம். முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட தலைமை எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக</p></div>
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in