என்னை முதல்வராக்க நேரடியாக அணுகவில்லை: திமுக, அதிமுக குறித்து திருமாவளவன் கருத்து

என்னை முதல்வராக்க நேரடியாக அணுகவில்லை: திமுக, அதிமுக குறித்து திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

சென்னை: என்னை முதல்​வ​ராக்க திமுக, அதி​முக நேரடி​யாக என்​னிடம் அணுக​வில்லை என்று விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: என்னை முதல்​வராக்க திமுகவோ, அதி​முகவோ அதி​காரப்​பூர்​வ​மாக யாரும் என்னை அப்படி அணுக​வில்லை. நானும் யாரிட​மும் பேச​வில்​லை.

தமிழகத்​தில் தலித் சமூகத்​தைச் சார்ந்த ஒரு​வர் முதல்​வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்​னும் தயா​ராக​வில்லை என்​பது அனை​வரும் அறிந்த கசப்​பான உண்​மை​யாகும். இந்​தி​யா​வில் உத்​தரப்பிரதேசம், ஆந்​தி​ரா, மகா​ராஷ்டிரா, பிஹார் மற்​றும் பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் தலித்​துகள் முதல்​வர்​களாக ஆட்சி பீடத்​தில் கோலோச்​சிய வரலாறு நடந்​தேறி​யுள்​ளது. ஆனால், தமிழகத்​தில் இன்​னும் ஒரு நூறாண்​டா​னாலும் அது கனவாகவே இருக்​கும் என்​பதை அறிந்​தவன் நான். இவ்வாறு கூறியுள்ளார்.

முன்​ன​தாக அ​தி​முக, திமுக மற்​றும் அந்தக் கூட்​ட​ணி​யில் உள்ள சில கட்​சிகள் இணைந்​து, என்னை முதல்​வ​ராக்க முயற்சி மேற்​கொண்​ட​தாக தகவல் கிட்​டியது. அதற்கு நாங்​கள் இணங்கவில்லை என்று பேட்​டி​யில் தெரி​வித்​திருந்​தார்.

என்னை முதல்வராக்க நேரடியாக அணுகவில்லை: திமுக, அதிமுக குறித்து திருமாவளவன் கருத்து
முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி: அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in