முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி: அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்

முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி: அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்
Updated on
1 min read

சென்னை: முதல்​வர் விஜய்​யின் ஜோதிடர் ராதன் பண்​டிட் வெற்றிவேல் முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று ஆட்​சிப் பொறுப்​பேற்​றதும் தனது வெற்​றிக்கு உந்​துசக்​தி​யாக​வும், ஆன்​மிக வழி​காட்​டி​யாக​வும் திகழ்ந்த ரிக்கி ராதன் பண்​டிட் வெற்றிவேலுக்கு முக்​கிய அரசுப் பதவியை விஜய் வழங்கியுள்ளார்.

இவர், மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் ஆன்​மிக ஆலோ​சக​ராக​வும் அறியப்​படுகிறார். “2026 தேர்​தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்​வ​ரா​வார்” என ராதன் பண்​டிட் வெளி​யிட்ட கணிப்​பு​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வந்தன. அவர் கணித்​த​படியே இன்று விஜய் முதல்​வ​ராக அரியணையில் அமர்ந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், தனது நம்​பிக்​கைக்​குரிய ஆலோ​சக​ரான ராதன் பண்​டிட் வெற்​றிவேலை, ‘தமிழக முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி’ ஆக நியமித்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில், ‘தமிழக முதல்​வரின் அரசி​யல் விவ​காரங்​களைக் கவனிப்​ப​தற்​கான சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் நியமிக்​கப்​படு​கிறார். அவர் பொறுப்​பேற்​கும் தேதியி​ல் இருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்​கான பணி விதி​முறை​கள் மற்​றும் நிபந்​தனை​கள் குறித்​துத் தனி​யாக அறிக்கை வெளி​யிடப்​படும்’ என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி: அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்
திருப்​பத்​தூர் தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in