“திமுக - அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா வகுத்த வியூகம்” - முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | கோப்புப் படம்

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | கோப்புப் படம்

Updated on
1 min read

பெரம்பலூர்: “அதிமுகவின் கூடாரத்தை காலி செய்ய வேண்டும் என்பதே விஜய்யின் எண்ணம். திமுக - அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா வகுத்த வியூகம். தவெகவின் செயல்பாட்டால் தோழமை கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆதரவு அளிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்” என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசங்கர் கூறுகையில், “விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போதே திமுக, தவெக இடையேதான் போட்டி என்று கூறினார். இன்றுவரை அதே கருத்தை விஜய் முன் வைக்கிறார். இந்த கருத்தைதான் திருமாவளவன் சுட்டிக் காட்டி இருதுருவ அரசியலை முன்னெடுக்க தவெக முனைப்புடன் உள்ளது எனக் கூறினார். அவர் திமுக மீதான வெறுப்பில் பேசவில்லை.

அதிமுகவின் கூடாரத்தை காலி செய்ய வேண்டும் என்பதே விஜய்யின் எண்ணம். தவெகவின் செயல்பாட்டால் தோழமை கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆதரவு அளிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். பாஜக தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. திருமாவளவனும் பலமுறை இக்கருத்தை சுட்டிக் காட்டினார். ஆனால் விஜய் குதிரை பேரம் நடத்துவதில் குறியாக உள்ளார்.

திமுக ஆட்சியின்போது, தலைவர் ஸ்டாலினை தோழமை கட்சியினர் நேரடியாக சந்தித்து பேச முடியும். தவெக ஆட்சியில் விஜய்யை, தோழமை கட்சியினர் சந்திக்க முடியவில்லை. தவெக - தோழமை கட்சிகள் இடையேயான இடைவெளி, கூட்டணியிடையே அரவணைப்பு குறைந்திருப்பதை காட்டுகிறது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக குற்றம் சாட்டிய விஜய், கன்னியாகுமரி லாக்கப் மரணத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார். திமுக-அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா வகுத்த வியூகம். சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா பரப்பும் வதந்தியை அதிமுக தொண்டர்கள் விருப்பவில்லை.

விஜய் கரூர் செல்வதை திமுக தடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. 6 மாதங்கள் வாய் திறக்கக்கூடாது என்று இருந்தோம். மக்களின் நிலையைப் பார்த்து பேச வேண்டி இருக்கிறது. தவெக ஆட்சி அமைந்து, எந்த புதிய திட்டங்களும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்கின்றனர்.

திமுகவின் திட்டங்களை யாராலும் அழிக்க முடியாது. சினிமா ரசிகர்கள் மட்டுமே விஜய்யிற்கு ஆதரவாக உள்ளனர். பா.ஜனதாவால் நேரடியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அண்ணாமலை போன்றவர்களை களத்தில் இறங்கவிட்டு தமிழகத்தில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | கோப்புப் படம்</p></div>
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசிய வழக்கு: கைதான 3 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in