பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்றப்படுவதால் பிப். முதல் மே வரை படகு, கப்பல்களுக்கு தடை

பாம்பனில் உள்ள பழைய ரயில் பாலம் (கோப்பு படம்)

பாம்பனில் உள்ள பழைய ரயில் பாலம் (கோப்பு படம்)

Updated on
1 min read

ராமேசுவரம்: ​பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்​றும் பணி​களுக்​காக பிப்​ர​வரி முதல் மே மாதம் வரை ரயில் பாலத்​தைக் கடந்து செல்ல படகு மற்​றும் கப்​பல்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

நூற்​றாண்​டைக் கடந்த பாம்​பன் பழைய ரயில் பாலத்​துக்​குப் பதிலாக புதிய பாலம் கட்​டப்​பட்​டு, கடந்த ஆண்டு ஏப்​ரல் 6-ம் தேதி முதல் பயன்​பாட்​டில் உள்​ளது. பாம்​பனில் உள்ள ரயில் பாலங்​களை கடந்​து​தான் சென்​னை, காக்​கி​நா​டா, விசாகப்​பட்​டினம், கொல்​கத்தா உள்​ளிட்ட வடக்​குப் பகுதி துறை​முகங்​களி​லிருந்து தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி உள்​ளிட்ட தென்​பகுதி துறை​முகங்​களுக்​கும், குஜ​ராத், மும்​பை, கோவா, கேரளா போன்ற மேற்​குப் பகுதி துறை​முகங்​களி​லிருந்து வங்​காள விரி​குடா கடல் பகு​திக்கு சிறிய ரக கப்​பல்​கள், ஆழ்​கடல் மீன்​பிடிப் படகு​கள் பயணித்து வரு​கின்​றன.

கப்​பல்​கள், படகு​கள் செல்​வதற்​காக புதிய ரயில் பாலத்​தின் நடுவே உள்ள செங்​குத்து தூக்​குப் பாலம் ஒவ்​வொரு முறை தூக்​கப்​படும்​போதும், பழைய ரயில் தூக்​குப்​பால​மும் திறக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதனால் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்​விஎன்​எல்) சார்​பில், பழைய பாம்​பன் பாலம் நடு​வில் தூக்​குப்​பாலம் மற்​றும் கர்​டர் பாலம், தண்​ட​வாளங்​களை ரூ.2.53 கோடி​யில் அகற்ற ஒப்​பந்​தம் விடப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, பிப்​ர​வரி முதல் மே மாதம் வரையி​லான 4 மாதங்​களுக்கு பழைய பாம்​பன் ரயில் பாலத்தை அகற்​றும் பணி​கள் நடை​பெற உள்​ளன. இதையடுத்​து, 4 மாதங்​களுக்கு பாம்​பன் தூக்​குப்​பாலம் வழி​யாக கப்​பல், படகு​கள் கடந்து செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பாலத்தை அகற்​றும் பணிக்​கான கருவி​கள் மற்​றும் இயந்​திரங்​கள் பாம்​பனுக்கு விரை​வில் கொண்டு வரப்​பட உள்​ளன என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பாம்பனில் உள்ள பழைய ரயில் பாலம் (கோப்பு படம்)</p></div>
பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in