பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னையில் நேற்று நடந்த உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்  மகளிருக்கு தொழில் கடன்களை வழங்கினார். இதில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் நேற்று நடந்த உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு தொழில் கடன்களை வழங்கினார். இதில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் ஒவ்​வொரு பெண்​ணும் கல்வி பயில, தொழில்​ முனை​வோ​ராக மாற, எந்த​வித அச்சமும் இல்லாமல் சுதந்​திர​மாக வாழக்​கூடிய கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​படும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் பெண்கள் பணி​யிடப் பங்​கேற்பு மற்​றும் பாது​காப்பை மேம்​படுத்​தும் நோக்​கத்​தில் தமிழ்​நாடு மகளிர் வேலை​வாய்ப்பு மற்​றும் பாது​காப்பு (டிஎன்​டபிள்​யு-சேஃப்) எனும் திட்​டத்தை தமிழக அரசு அமல்​படுத்​தி​யுள்​ளது.

இந்தத் திட்​டம் உலக வங்​கி​யின் ரூ.1,185 கோடி நிதி உத​வி​யுடன், மொத்​தம் ரூ.5,000 கோடி​யில் 5 ஆண்​டு​கள்​(2024-2029) செயல்​படுத்​தப்பட உள்​ளது. இந்​நிலை​யில் உலக மகளிர் உச்சி மாநாடு-2026 சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று தொடங்கியது.

இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்​பின் டிஎன்​டபிள்​யு-சேஃப் திட்​டத்​தை​யும், மகளிர் பயன்​பாட்​டுக்​கான பல்​வேறு வாக​னங்களின் சேவைகளை​யும் தொடங்கி வைத்​தார்.

தொடர்ந்​து, நான் முதல்​வன் திட்​டத்​தின்​கீழ் பயிற்சி பெற்ற மாணவி​களுக்கு பணிநியமன ஆணை​களை​யும், பல்​வேறு திட்​டங்​களின்​கீழ் பெண்​களுக்கு தொழில் தொடங்க கடனுதவிகளை​யும் முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார்.

மேலும், தொழில் துறை​களில் பெண்கள் பங்களிப்பை மேம்​படுத்​து​வதற்​கான ஒத்​துழைப்பை வலுப்படுத்​தும் வகை​யில், பல்​வேறு தொழில் நிறுவனங்​கள் உள்​ளிட்ட அமைப்​பு​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் அப்போது கையெழுத்​தாகின.

இந்த விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே பெண்கள் அதி​கம் வேலைக்​குச் செல்லும் மாநில​மாக தமிழகம்​தான் உள்​ளது. ஆனால், பெண்கள் அதி​கமாக வேலைக்குச் செல்​வ​திலேயே நாம் திருப்தி அடைந்​து​விடக் கூடாது.

புதி​தாக வளர்ந்து வரும் துறை​களில் பெண்கள் இடம்​பெற வேண்​டும். உயர் பொறுப்​பு​களில் ஆண்​களுக்கு சரிசம​மாக பெண்கள் இருக்க வேண்​டும். அதற்​காகவே உலக வங்​கி​யின் நிதி உதவி​யுடன் தமிழ்​நாடு மகளிர் வேலை​வாய்ப்பு மற்​றும் பாது​காப்புத் திட்​டத்தை தற்​போது தொடங்​கி​யுள்​ளோம்.

பெண்கள்தான் இந்த சமூகத்​தின் முது​கெலும்​பு. அவர்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடி​யாது. பெண்கள் நலனுக்​காக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. இதன் தொடர்ச்​சி​யாகவே டிஎன்​ டபிள்​யு-சேஃப் அமைந்​துள்​ளது.

பெண்கள் வேலைக்​குச் செல்ல வேண்​டுமெனில் குழந்​தைகள், முதி​யோரை கவனித்​துக் கொள்​ளும் பொறுப்பை யாராவது எடுத்​துக்​கொள்ள வேண்​டும். இந்த நடை​முறை சிக்​கலை உணர்ந்து குழந்​தை, முதியோர் பராமரிப்​பு, பாது​காப்​பான தங்​குமிடங்​கள் என்று அதற்கான ஆதரவு சேவை​களை​யும் இத்​திட்​டம் வழங்​கு​வது பாராட்​டுக்​குரியதாகும்.

மேலும், பெண்​களின் பாது​காப்​பிலும் இந்தத் திட்​டம் கவனம் செலுத்​துகிறது தமிழக பெண்​களுக்கு நான் ஒரு உறுதி தரு​கிறேன். ஒவ்​வொரு பெண்ணும் கல்வி பயில, தொழில் முனை​வோ​ராக மாற, எந்​தவித அச்​ச​மும் இல்​லாமல் சுதந்​திர​மாக வாழக்​கூடிய கட்​டமைப்​பு​கள் தமிழகத்​தில் உரு​வாக்​கப்​படும். இவ்​வாறு பேசி​னார்.

துணை முதல்​வர் உதயநிதி பேசும்போது, “தமிழக பெண்களின் வளர்ச்​சியை அடுத்​தக் கட்​டத்​துக்கு கொண்டு செல்வதை உறு​தி​செய்ய உலக வங்​கி​யின் ரூ.1,185 கோடி நிதி​யுதவி​யுடன் ரூ.5 ஆயிரம் கோடி​யில் இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்ளது.

அதனுடன் சி லீட்ஸ் (She Leads) என்ற தலைப்​பில் சர்​வ​தேச மாநாடும் தொடங்​கி​யுள்​ளோம். பெண் குழந்​தைகள் தொடங்​கி, பள்​ளி, கல்​லூரி செல்​லும் மாணவி​கள், பணிக்​குச் செல்​லும் மகளிர், இல்​லத்​தரசிகள், வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு மகளிரின் பாது​காப்​பை​யும், வளர்ச்​சி​யை​யும் உறுதி செய்​யும்.

இத்​தகைய திட்​டங்களால் நமது திரா​விட மாடல் ஆட்​சி, இந்​தி​யா​வுக்கே முன்​மா​திரி​யாக திகழ்கிறது” என்று தெரி​வித்​தார். இந்த மாநாட்​டில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், கீதா ஜீவன், மா.சுப்​பிரமணி​யன், தமிழ்​நாடு மகளிர் ஆணை​யத் தலை​வர் ஏ.எஸ்​.குமரி, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், உலக வங்கி மண்டல இயக்​குநர் செம் மெட்டேஉட்பட பலர் கலந்துகொண்​டனர்.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடந்த உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்  மகளிருக்கு தொழில் கடன்களை வழங்கினார். இதில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.</p></div>
இந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்: அன்புமணி திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in