மதுரை: கவுன்சிலர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பொறுப்பு மேயர்!

மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க கலந்துரையாடும் மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன்.

மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க கலந்துரையாடும் மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன்.

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

மதுரை: கட்டுப்பாடில்லாமல் பேசும் கவுன்சிலர்களைக் கட்டுப் படுத்தவோ, கண்டிக்கவோ முடியாமல் துணை மேயர் டி.நாகராஜன் தவிப்பதால் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேச ஆளும்கட்சிக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லாமல் மதுரை மாநகராட்சிக் கூட்டம் சமீப காலமாக பெரும் கூச்சல் குழப்பத்துடன் நடக்கிறது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பெரும்பான்மை யாக திமுகவைச் சேர்ந்த 67 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து அதிமுகவுக்கு 15, காங்கிரஸூக்கு 5, மார்க்சிஸ்ட்டுக்கு 3, மதிமுகவுக்கு 3, விசிக, பாஜக, சுயேச்சை தலா 1 உட்பட 4 பேர் உள்ளனர். மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஒருவர் இறந்து விட்டதால் அந்த வார்டு காலி யாக உள்ளது.

கடந்த காலத்தில் திமுகவைச் சேர்ந்த இந்திராணி மேயராக இருந்தார். அப்போது திமுக கவுன்சிலர்கள் தமிழக அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் ஆதரவாக நிற்பார்கள். எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் விமர்சனம் செய்தால் மேயருக்கும், அதிகாரிகளுக்கும் ஆதரவாக பதிலடி கொடுப்பார்கள்.

ஆனால், தற்போது ஆளும்கட்சிக்கு ஒரு கவுன் சிலர்கூட இல்லாததால் திமுக, அதிமுக கவுன்சிலர்களின் வாதங்களையும், கேள்வி களையும் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள். மாமன்றக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு மேயராக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் டி.நாகராஜன், கவுன்சிலர்களை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாமல் தவிக்கிறார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது ஆளும்கட்சிக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லா ததால் மாநகராட்சிக்கும், அரசுக்கும் எதிராகப் பேசும் கவுன்சிலர்களுக்கு பதிலடி கொடுக்க ஆளில்லை. ஆளும்கட்சி அமைச்சரின் செயல்பாடுகளை திமுக கவுன்சிலர்கள் விமர்சித்தால் கோஷ்டிப்பூசலால் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் தவெக எம்எல்ஏக்கள் அவற்றை கண்டும், காணாமல் உள்ளனர்.

அதுபோல், கடந்த காலத்தில் மாநகராட்சி ஆணையரை மீறி கவுன்சிலர்கள் அதிகாரிகளை கண்டிக்கவோ, நேரடியாக கிண்டலாகப் பேசவோ, கடிந்து கொள்ளவோ முடியாது. ஏனென்றால், அவர்கள் மீண்டும் தங்கள் வார்டு பணிகளுக்கு ஆணையரிடமும், மேயரிடமும் தான் போய் நிற்க வேண்டும். அதனால், மாநகராட்சிக் கூட்டத்தில் மேயரையும், ஆணையரையும் அனுசரித்தே கவுன்சிலர்கள் அனைவரும் பேசி வந்தனர்.

தவெக அரசு, அதன் அமைச்சர்களின் வழிகாட்டுதல் படிதான் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் செயல்படு கிறார்கள். பொறுப்பு மேயரான துணை மேயர், மாநகராட்சி நிர்வாகத்தில் மேயருக்கான முழு அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. அவரே, மாநகராட்சிக் கூட்டங்களில், ஒரு கவுன்சிலர் போல் அதிகாரி களிடம் வாக்குவாதம் செய்யும் சூழல்தான் உள்ளது. மேலும், மாமன்றக் கூட்டத்தில், விவாதம் தொடங்கு வதற்கு முன்பே கவுன்சிலர்கள் ஆள் ஆளாளுக்கு எழுந்து கட்டுப்பாடின்றி பேசுகின்றனர். தீர்மானங்களை வாசிப்பதற்கு முன்பே அதைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

கூட்டம் தொடங்கி யதும் திமுக கவுன்சிலர்கள் குழு தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மற்ற அரசியல் கட்சி கவுன்சிலர்கள் குழு தலைவர்கள் பேசுவதற்கு முன்பாக மாமன்ற மரபு வரிசையை மீறி பேசும் கவுன்சிலர்களை, துணை மேயரால் கட்டுப்படுத்த முடிய வில்லை. துணை மேயர் பொறுப்பு மேயராக இருப்பதால் நிர்வாகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரி களையும், மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களையும் அனு சரித்தே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதனால், மாநகராட்சி ஆணையர் முதல் அவரது கீழ் நிலை அதிகாரிகள் வரை மாமன்றக் கூட்டம் தொடங்கி தீர்மானங்களை நிறைவேற்றி முடிப்பதற்குள் கவுன்சிலர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். கூச்சல், குழப்பத்தால், திமுக, அதிமுக குழுத் தலைவர்கள் மற்றும் சில கவுன்சிலர்கள் பேசும் வரைதான் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் அமருகிறார்கள். அதற்குப் பிறகு மாமன்றக் கூட்டம் பெரும்பாலான கவுன்சிலர்கள் இல்லாமலே நடக்கிறது, என்றனர்.

<div class="paragraphs"><p>மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க கலந்துரையாடும் மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன். </p></div>
ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணங்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in