விஜய் ஆட்சி அமைக்க தாமதமானதால் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு

விஜய் ஆட்சி அமைக்க தாமதமானதால் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி: தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய் ஆட்சி அமைக்க கால தாமத​மான​தால் மனமுடைந்து தீக்​குளித்த அக்​கட்சி நிர்​வாகி இசக்​கியப்​பன் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் அரு​கே​யுள்ள புது​மனை செட்​டிகுளம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் இசக்​கியப்​பன் (45). தமிழக வெற்​றிக்​கழக கிளைச் செயல​ராக பொறுப்பு வகித்து வந்​தார். தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்க வேண்​டி, கடந்த 2 மாதங்​களுக்கு முன், வேல் அலகு குத்தி நேர்த்​திக்​கடன் செலுத்தியிருந்​தார்.

இந்​நிலை​யில், தேர்​தலில் அறு​திப்​பெரும்​பான்​மை பெறாத​தால் ஆட்சி அமைக்க கால​தாமதம் ஏற்​பட்​டது. இதனால் மனமுடைந்த இசக்​கியப்​பன் கடந்த 9-ம் தேதி வீட்​டிலிருந்த மண்​ணெண்​ணெயை தனது உடலில் ஊற்றி தீக்​குளித்​தார். அவரது அலறல் சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் வந்து தீயை அணைத்​து, அவரை மீட்​டனர்.

பின்​னர் அவர், நாகர்​கோ​வில் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. பழவூர் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரித்து வந்​தனர். இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி இசக்​கியப்​பன் நேற்று உயி​ரிழந்​தார்.

விஜய் ஆட்சி அமைக்க தாமதமானதால் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு
என்னை முதல்வராக்க நேரடியாக அணுகவில்லை: திமுக, அதிமுக குறித்து திருமாவளவன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in