“குறைவான தொகுதிகளை ஏற்கமுடியாது என்று சொல்லி இருக்கிறோம்” - மார்க்சிஸ்ட் பெ.சண்முகம் உறுதி

திமுக குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.  படம்: எல். சீனிவாசன்

திமுக குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். படம்: எல். சீனிவாசன்

Updated on
1 min read

கடந்த தேர்​தலை விட குறை​வான தொகு​தி​களை ஏற்​றுக் கொள்ள முடி​யாது என திமுக-​விடம் தெரி​வித்​திருப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் உறு​திபடத் தெரி​வித்​தார்.

திமுக கூட்டணியில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கடந்த முறை போட்​டி​யிட்ட 6 தொகு​தி​களில் ஒன்றை குறைத்து பெற்​றுக்​ கொள்​ளு​மாறு திமுக வலி​யுறுத்தி வரு​கிறது. இதனை ஏற்க மறுக்​கும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், கடந்த முறை போட்​டி​யிட்ட தொகு​தி​களை காட்​டிலும் கூடு​தலான தொகு​தி​கள் வேண்​டும் என திமுக-வுக்கு தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து வரு​கின்​றன.

இதனால் கம்​யூனிஸ்ட் கட்​சிகளு​ட​னான பேச்​சு​வார்த்​தை​யில் இழுபறி நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யுட​னான மூன்​றாம் கட்ட பேச்​சு​வார்த்தை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று நடை​பெற்​றது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பெ.சண்​முகம் கூறிய​தாவது: கடந்த முறை போட்​டி​யிட்ட தொகு​தி​களை விட குறைந்த தொகு​தி​களை பெற்​றுக்​கொள்​ளு​மாறு திமுக தரப்பு வேண்​டு​கோள் விடுத்​திருந்​தது. அதை ஏற்க முடி​யாது, கடந்த முறை போட்​டி​யிட்ட தொகு​தி​களை விட கூடு​தல் தொகு​தி​கள் வேண்​டும், உரிய முறை​யில் எங்​களுக்​கான இடங்​கள் உயர்த்​தப்பட வேண்​டும் என திமுக-​விடம் சொல்​லி​யிருக்​கி​றோம்.

கூடு​தல் தொகு​தி​களை கேட்​டுப் பெறு​வதற்​கான முயற்​சிகளை நாங்​கள் தொடர்ந்து மேற்​கொள்​வோம். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் பலத்​துக்கு ஏற்ப தொகு​தி​கள் வழங்​கப்பட வேண்​டும். கூடு​தல் தொகு​தி​களை விட குறை​வாக ஒதுக்​கி​னால், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடி​வெடுக்​கப்​படும். எங்​களின் கோரிக்கை குறித்து முதல்​வரிடம் கலந்து பேசி தெரி​விப்​ப​தாக சொல்லி இருக்​கி​றார்​கள். ஓரிரு நாட்​களுக்​குள் தொகு​திப் பங்​கீடு உடன்​பாடு முடிவுக்கு வரும் என எதிர்​பார்க்​கி​றோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>திமுக குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.  படம்: எல். சீனிவாசன்</p></div>
“திமுக ஆட்சியின் ஆட்டத்துக்கு 15-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட்டுவிட்டது” - இபிஎஸ் பிரகடனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in