‘பழநி கோயில் நில மோசடியில் சிபிஐ விசாரணை’ - மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அறிவிப்பு

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

Updated on
1 min read

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக இன்று ஆஜரானர்.

அப்போது அவர், “பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரத் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பதிவாளரைக் கொண்டு, பத்திரப் பதிவு செய்தது, உடனடியாக புகார் அளிக்காதது, நிலத்தின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு விசாரிக்கப்பட வேண்டிய விசயங்கள் இந்த வழக்கில் உள்ளன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், “கோரிக்கைகள் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக” கூறினர். எனவே விரைவில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நில மோசடி வழக்கு பின்னணி:

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஜூலை 6-ம் தேதி ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக பழநி கோயில் இணை ஆணையர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 

<div class="paragraphs"><p><em>உயர் நீதிமன்றம்&nbsp;மதுரை கிளை</em></p></div>
ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்க புதிய எஸ்ஐடி அமைக்கிறது உ.பி. அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in