ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்க புதிய எஸ்ஐடி அமைக்கிறது உ.பி. அரசு

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில்

Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் புதிய சிறப்பு புல​னாய்​வுக் குழு (எஸ்​ஐடி) அமைக்​கும் பணியை உ.பி. அரசு தொடங்​கி​யுள்​ளது.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​ நாத்​திடம் கடந்த ஜூன் 13-ம் தேதி ஸ்ரீ ராம ஜென்​மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்​டளை கோரிக்கை விடுத்​தது. இதையடுத்து லக்னோ மண்டல ஆணை​யர் விஜய் விஸ்​வாஸ் பந்த் தலை​மை​யில் மூன்று பேர் கொண்ட எஸ்​ஐடி-யை உ.பி. அரசு அமைத்​தது.

எஸ்​ஐடி தனது முதற்​கட்ட விசா​ரணை அறிக்​கை​யில் திருட்டு நடந்ததை உறுதி செய்​தது. இதன் அடிப்​படை​யில் ஜூன் 23ம் தேதி அயோத்​தி​யில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இவ்​வழக்​கில் எட்டு பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இருப்​பினும், காணிக்கை திருட்டு வழக்​கில் புதிய எஸ்​ஐடி அமைக்க உச்ச நீதி​மன்​றம் கடந்த திங்​கட்​கிழமை உத்​தர​விட்​டது.

இது தொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது, மூத்த ஐபிஎஸ் அதி​காரி ஒரு​வரின் தலை​மை​யில் புதிய எஸ்​ஐடி அமைக்க தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் உத்​தர​விட்​டார். இந்த நடவடிக்​கை, விசா​ரணையை ஒரு தீர்க்​க​மான கட்​டத்​திற்கு கொண்டு செல்ல உதவும் என்று தலைமை நீதிபதி குறிப்​பிட்​டார். இதன் அடிப்படையில் காணிக்கை திருட்டு குற்​ற​வியல் வழக்கை விசாரிக்க தற்​போது, புதிய எஸ்​ஐடி அமைக்க முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இந்​தப் புதிய சிறப்பு புல​னாய்​வுக் குழு​வில், டிஐஜி மற்​றும் எஸ்​.பி. நிலை​யி​லான அதி​காரி​கள் இடம்​பெறு​வார்​கள் என்று தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. முதல் குழு​வில் இடம்​பெற்​றிருந்த லக்னோ மண்டல ஐஜி கிரண் இதி​லும் சேர்க்​கப்​படு​வார். இந்த வழக்​கின் அடுத்​தகட்ட வி​சா​ரணை ஜூலை 27-ம்​ தேதி உச்​சநீதி​மன்​றத்​தில்​ நடை​பெறவுள்​ளது.

<div class="paragraphs"><p><em>அயோத்தி ராமர் கோயில்</em></p></div>
வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதம்: செல்ஃபி வீடியோ மூலம் பிரதமர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in