திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு குறித்து ஜூலை 21 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்: ஐகோர்ட்

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
2 min read

மதுரை: திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த பா. இராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசன கட்டணம், பூஜை கட்டணம் மற்றும் சிறப்பு பூஜைகள் கட்டணம் தக்கார் அல்லது அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் பொது மக்களிடம் கருத்து நிர்ணயம் செய்யப்படும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்பட பல கோயில்களில் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்க அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்த வில்லை. அதனால் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் கட்டணம் உயர்வு குறித்து தெரிவதில்லை. கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடும்போது இந்து சமய அறநிலையத் துறை இணையதளங்களில், மாவட்ட இணையதளங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கோயில் வளாகத்தில் பக்தர்கள் பார்வையில் தெரியுமாறு பெரிய அளவில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க வேண்டும். ஆட்சேபனைகள், கருத்துகள் மற்றும் அதனடிப்படையில் கோயில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிறப்பிக்க உத்தரவிடவேண்டும் என வழக்கில் தொடர்ந்தேன்.

அந்த வழக்கில் என் கோரிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நான்கு மாதங்களுக்குள் அறங்காவலர் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தக்கார் தீர்மானம் அடிப்படையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டணச் சேவைகள் கட்டணத்தை உயர்த்த பொது மக்கள் மற்றும் பக்தர்களிடம் கருத்து கேட்டு எவ்வித கையெழுத்தும் இன்றி 20.06.2026 அன்று மட்டும் கோயில் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கட்டணம் எதுவும் உயர்த்தவில்லை. கட்டண உயர்வு குறித்து கருத்துதான் கேட்கிறோம் என்று பேட்டி அளித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அறங்காவலர் குழு அமைக்காத நிலையில், தக்கார் தீர்மானம் அடிப்படையில், பரவலாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவிக்காமல் வெளியிடப்பட்ட கட்டண உயர்வு அறிவிப்பு செல்லாது எனவும், அறங்காவலர் குழுத் தீர்மானம் அடிப்படையில் தான் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “மனுதாரர் தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். ஜூன் 25-ம் தேதி அவர் வழங்கிய ஆட்சேபனை, 27-ம் தேதி கிடைக்கப் பெற்றது. மனுதாரர் 28-ம் தேதி வழக்கை தாக்கல் செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடவும், ஆட்சேபனைகள் தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 7 என்பதை 21-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் உத்தரவிட்டனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
சட்டவிரோத கிரானைட் குவாரி நடத்தி ரூ.277 கோடி மோசடி: வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in