கார் விபத்து இழப்பீடு: தங்க தமிழ்​செல்​வனும், மகளும் இணைந்து ரூ.2.48 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்

Updated on
1 min read

சென்னை: தேனி திமுக எம்​.பி. தங்க தமிழ்​செல்​வனுக்கு சொந்​த​மான கார் மோதி இருசக்கர வாக​னத்​தில் வந்​தவர் விபத்​துக்​குள்​ளான​தில், பாதிக்​கப்​பட்ட நபருக்கு ரூ. 2.48 லட்​சத்தை இழப்​பீ​டாக தங்க தமிழ்​செல்​வனும், காரை ஓட்டி வந்த அவரது மகளும் கூட்​டாக சேர்ந்து வழங்க மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை கொளத்​தூரைச் சேர்ந்த ஜெயக்​கு​மார் என்​பவர் கடந்த கடந்த 2021 நவ.16 அன்று மாதவரம் 200 அடி சாலை​யில் இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அவ்​வழியே தேனி எம்​.பி.தங்க தமிழ்​செல்​வனுக்குச் சொந்​த​மான காரை அவரது மகள் சாந்தி ஓட்டி வந்த நிலை​யில், அந்த கார் ஜெயக்​கு​மார் மீது மோதி​ய​தில், அவர் படு​காயமடைந்​தார்.

அதையடுத்து விபத்து இழப்​பீடு கோரி ஜெயக்குமார் சென்னை மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கு நீதிபதி கே.எஸ்​.​ராஜேஷ்கு​மார் முன்​பாக நடந்​தது. அப்​போது எதிர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், கா​யமடைந்த அவரை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்து சாந்தி தனது சொந்தசெல​வில் சிகிச்சை அளித்​துள்​ளார் என வாதிட்​டனர்.

பதி​லுக்கு மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கவனக்​குறை​வாக காரை ஓட்டி வந்​த​தால்தான் ஜெயக்​கு​மார் படுகாயமடைந்து, சிறிது காலம் வேலைக்​குச் செல்ல முடி​யாத நிலை ஏற்பட்​டது என்றார். இருதரப்பு வாதங்களை​யும் கேட்ட நீதிப​தி, ஜெயக்கு​மாருக்கு தங்க தமிழ்​செல்​வனும் மகள் சாந்தியும் இணைந்து ரூ.2.48 லட்​சத்தை 7.5% வட்​டி​யுடன் வழங்க உத்​தரவிட்டார்.

<div class="paragraphs"><p>தங்க&nbsp;தமிழ்ச்செல்வன்</p></div>
உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி ஆண்டிபட்டியில் மொய் பணம் ரூ.13 லட்சம் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in