உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி ஆண்டிபட்டியில் மொய் பணம் ரூ.13 லட்சம் பறிமுதல்

மாதிரி படம்

மாதிரி படம்

Updated on
1 min read

ஆண்டிபட்டி: உரிய ஆவணம் இல்​லாத​தால், மொய்ப்​ பணம் ரூ.13 லட்​சத்தை பறக்கும் படை அதி​காரி​கள் பறி​முதல் செய்து ஆண்​டிபட்டி கரு​வூலத்​தில் ஒப்​படைத்​தனர்.

தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வுப்​படி, ஆவணமின்றி கொண்டு செல்​லப்​படும் பணம் மற்​றும் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி, தேர்​தல் பறக்​கும் படை​யினர் கண்​டமனூர் அருகே ராஜேந்​திரா நகர் பகு​தி​யில் வாக​னச் சோதனை​யில் நேற்று ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை​யிட்​டனர். அதில் ரூ.12 லட்​சம் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து பணம் கொண்​டு​வந்த அம்​மச்​சி​யாபுரத்​தைச் சேர்ந்த இளை​ய​ராஜா​விடம் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். அதில், கடமலைக்​குண்டு அருகே அய்​ய​னார் கோயி​லில் வசந்த விழா நடத்​தி, அதில் கிடைத்த மொய்ப்​பணத்தை வீட்​டுக்கு கொண்டு செல்​வ​தாகத் தெரி​வித்​தார். ஆனால், அவரிடம் அதற்​கான ஆவணம் இல்​லாத​தால் பணத்தை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

இதே​போல், ஆண்​டிபட்டி புறநகர் பகு​தி​யில் பறக்​கும் படை​யினர் சோதனை செய்​து​கொண்​டிருந்​தனர். அப்​போது கேரள மாநிலம் குமுளி​யில் இருந்து உசிலம்​பட்டி நோக்​கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை​யிட்​டனர். அதில் குமுளியைச் சேர்ந்த திவான் மைதீன் ரூ.1 லட்​சம் வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில், ராஜ​பாளை​யத்​தில் நடை​பெற உள்ள நிச்​சய​தார்த்த விழா​வில் மொய் செய்​வதற்​காக பணத்தை கொண்​டு​செல்​வ​தாகத் தெரி​வித்​தார். ஆனால், உரிய ஆவணம் இல்​லாத​தால் அதி​காரி​கள் அப்​பணத்தை பறி​முதல் செய்​தனர். இரண்டு இடங்​களி​லும் பறி​முதல் செய்​யப்​பட்ட பணத்தை பறக்​கும் படை​யினர் ஆவணப்​படுத்​தி, சீலிட்டு ஆண்​டிபட்டி கரு​வூலத்​தில் ஒப்​படைத்​தனர்.

<div class="paragraphs"><p>மாதிரி படம்</p></div>
முதன்முறையாக ‘க்யூ-ஆர்’ கோடு முறையில் தமிழகம்-புதுவை பார் கவுன்சிலுக்கு நாளை தேர்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in