சென்னை: விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.500 வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்களை இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட மனுவில் கோரியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.