600 சாலை சந்திப்பு வளைவுகளை சீரமைக்க மாநகராட்சி திட்டம்

600 சாலை சந்திப்பு வளைவுகளை சீரமைக்க மாநகராட்சி திட்டம்
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சிக்கு உட்​பட்ட 600 முக்​கிய பிர​தான சாலை சந்​திப்​பு​களில் விபத்​துகளின்றி சீரான போக்​கு​வரத்​துக்​காக இந்த சந்​திப்​பு​களில் உள்ள சாலை வளைவு​களை மேம்​படுத்​தும் பணி நடை​பெற்று வரு​கிறது.

மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீள​முடைய 488 பேருந்து தடச் சாலைகளும், 5,653.89 கி.மீ. நீள​முடைய 35,978 உட்​புறச் சாலைகளும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

நெரிசல் குறையும்

மாநக​ராட்சி சாலைகள் அனைத்​தும் தேசிய நெடுஞ்​சாலைகள், மாநில நெடுஞ்​சாலைகள் மற்​றும் மாநக​ராட்சி பேருந்து தடச் சாலைகளை இணை​கின்​றன. இவ்​வாறு இணை​யும் சாலை சந்​திப்​பு​களில் வாக​னப் போக்​கு​வரத்தை எளி​தாகும் வகை​யில் மேம்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

முதல்கட்டமாக 94 சாலைகள்

அதன்​படி, இந்த சாலை சந்​திப்​பு​களை போக்​கு​வரத்து மேலாண்மை வழி​காட்​டு​தலின்​படி திருத்​தி​யமைப்​ப​தன் மூலம் சந்​திப்​பு​களில் அமைந்​துள்ள வளைவு​களில் வாக​னங்​கள் எளி​தாக​வும் வேக​மாக​வும் செல்ல இயலும்.

இதனால் போக்​கு​வரத்து நெரிசல் குறைவதோடு ஆக்​கிரமிப்பு ஏற்​ப​டாத​வாறு தடுக்க இயலும். மேலும் பாத​சா​ரி​கள் அச்​சமின்றி பாது​காப்​பாக நடப்​ப​தற்​கும் வழி​வகை​யாக உள்​ளது.

முதற்​கட்​ட​மாக முக்​கிய பிர​தான சாலை சந்​திப்பு வளைவு​களில், 94 சாலை சந்​திப்பு வளைவு​களை மேம்​படுத்​து​வதற்கு ரூ.3 கோடி​யில் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இவற்​றில் ஈ.வெ.​ரா. சாலை​யில் டெய்​லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை, வாசு தெரு, அழகப்பா சாலை, டாக்​டர் நாயர் சாலை, எம்​.கே.பி. நகர் சாலை சந்​திப்பு மற்​றும் வேப்​பேரி சாலை ஈ.வி.கே. சாலை சந்​திப்பு உள்​ளிட்ட இடங்​களில் மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இப்​பணி​கள் ஜூலை 15-ம் தேதிக்​குள் முடிக்​கப்​படும். இதன் தொடர்ச்​சி​யாக, 600 சாலை சந்​திப்பு வளைவு​கள் மேம்​படுத்​தும் பணிக்​காக விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

600 சாலை சந்திப்பு வளைவுகளை சீரமைக்க மாநகராட்சி திட்டம்
மனமகிழ் மன்றங்களின் உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in