சென்னையில் உள்ள 7 கடற்கரைகளில் 3 ஷிப்டுகளாக தூய்மைப் பணி மேற்கொள்ளும் மாநகராட்சி

சென்னையில் உள்ள 7 கடற்கரைகளில் 3 ஷிப்டுகளாக தூய்மைப் பணி மேற்கொள்ளும் மாநகராட்சி
Updated on
1 min read

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், சென்​னை​யில் உள்ள 7 கடற்கரை பகு​தி​களில் 3 ஷிப்​டு​களாக தூய்​மைப் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உள்ள கடற்​கரைகளை பொது​மக்​களின் பொழுது​போக்​குக்கு உகந்த வகை​யில் மேம்​படுத்த மாநக​ராட்சி பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அதன்​படி, மெரினா கடற்​கரை, பெசன்ட் நகர், திரு​வான்​மியூர், பால​வாக்​கம், நீலாங்​கரை, அக்​கரை, திரு​வொற்​றியூர் கடற்​கரை பகு​தி​யில் தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் இயந்​திரங்​களைக் கொண்டு நாள்​தோறும் சுழற்சி முறை​களில் தூய்​மைப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, மெரி​னா​வில் உள்ள 2 நீலக்​கொடி கடற்​கரைத் திட்​டப் பகு​தி​கள் உள்​ளிட்ட கடற்​கரைப் பகு​தி​களில் நாள்​தோறும் பெரும்​பாலான பொது​மக்​கள் பொழுது​போக்​குக்​காக வந்து செல்​கின்​றனர்.

வார இறுதி நாட்​களில் இங்கு நாட்​டுப்​புற கலைநிகழ்ச்​சிகளும் நடத்​தப்​படு​கின்​றன. இதனால், இந்​தப் பகு​தி​களில் நாள்​தோறும் சுழற்சி முறை​யில் தூய்​மைப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

3 சுழற்சி (ஷிப்டு) முறை​களில் தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் உதவி​யாளர்​கள் என மொத்​தம் 152 பணி​யாளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், கடற்​கரை சுத்​தம் செய்​யும் 9 இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

தலா 20 ஏக்​கர் பரப்​பள​வில் 2 நீலக்​கொடி கடற்​கரை திட்​டப் பகு​தி​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, திட்​டம் 3-க்​கான பணி​கள் முடிவுறும் நிலை​யில் உள்​ளது. திட்​டம் 4 மற்​றும் 5-க்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. நீலக்​கொடி கடற்​கரைப் பகு​தி​யில் பசுமைப் பரப்பை அதி​கரிக்க 650 நாட்டு மரக்​கன்​றுகள் நடப்​பட்​டுள்​ளன.

கடற்​கரைப் பகு​தி​களுக்கு வரு​கை​தரும் பொது​மக்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​கள் அனை​வரும் தங்​களது குப்​பைக் கழி​வு​களை அதற்​காக வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில் மட்​டும் போட்​டு, மாநக​ராட்​சி​யின் தூய்​மைப் பணி​களுக்கு முழு​மை​யான ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சென்னையில் உள்ள 7 கடற்கரைகளில் 3 ஷிப்டுகளாக தூய்மைப் பணி மேற்கொள்ளும் மாநகராட்சி
சென்னை, புறநகரை குளிர்வித்த திடீர் மழை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in