செய்யாத பணிக்கு ரூ.16 லட்சத்தை வழங்கியதாக காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் முறைகேடு புகார்

செய்யாத பணிக்கு ரூ.16 லட்சத்தை வழங்கியதாக காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் முறைகேடு புகார்
Updated on
1 min read

காரைக்குடி: ​காரைக்குடி மாநக​ராட்​சி​யில் செய்​யாத பணிக்கு ரூ.15.80 லட்​சம் வழங்​கிய​தாக​வும் இந்த முறை​கேடு குறித்து ஒப்​பந்​த​தா​ரர் ஆதா​ரத்​துடன் புகார் தெரி​வித்​துள்ளார்.

சிவகங்கை மாவட்​டம், காரைக்​குடி மாநக​ராட்சி ஒப்​பந்​த​தா​ர​ராக இருப்​பவர் பாண்​டி. இவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: காரைக்குடி மாநகராட்சி மேயர் அறை, துணை மேயர் அறை, கூட்​டரங்கு மராமத்து பணி​யோடு, மேலும் 2 பணி​களுக்கு ரூ.18 லட்​சத்​தில் ஒப்​பந்​தம் எடுத்​தேன்.

ஆனால், ரூ.18 லட்சத்​துக்கான பணியை மட்​டும் என்னை செய்​ய​விடாமல், அந்த பணியை திமுக​வினரின் நெருங்​ கிய ஒப்​பந்​த​தா​ரர் மூலம் செய்தனர். தற்​போது, எங்​களது நிறு​வனப் பெயரில் காசோலையை கொடுத்​து​விட்டு, பணத்தை எடுத்து தரச் சொல்​கின்​றனர்.

நான் மறுத்து வரு​வ​தால், மற்ற 2 பணி​களுக்​குரிய பணத்தை விடுவிக்க அதி​காரி​கள் மறுக்​கின்​றனர். நான் எடுத்த பணியை வேறொரு​வர் மூலம் பணி செய்து முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதே​போல், கடந்த 3 ஆண்​டு​களாக மாநக​ராட்​சி​யில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ளன. இதுகுறித்து முறை​யாக விசா​ரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள், திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்து மாநக​ராட்சி ஆணை​யர் சங்​கரனிடம் கேட்​ட​போது, ‘ஒப்​பந்​தப் பணி முடிந்​த​தால் பணத்தை விடு​வித்​தோம். சம்​பந்​தப்​பட்ட ஒப்​பந்​த​தா​ரர் அந்த பணியை செய்​ய​வில்லை என்​றால், பணத்தை மாநக​ராட்சி நிர்​வாகத்​திடம் ஒப்படைக்​கலாம்’ என்​றார்.

செய்யாத பணிக்கு ரூ.16 லட்சத்தை வழங்கியதாக காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் முறைகேடு புகார்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in