ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். (உள்படம்) குரு பகவான்.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். (உள்படம்) குரு பகவான்.

Updated on
1 min read

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயி​லில் குருப் பெயர்ச்சி விழா இன்​று (மே 26) முற்​பகல் 11 மணிக்கு நடை​பெற உள்​ளது. இதற்​கான முன்​னேற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

திரு​வாரூர் மாவட்​டம் வலங்​கை​மான் வட்​டம் ஆலங்​குடி​யில் ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில், குரு பகவான் தனி சந்​நி​தி​யில் எழுந்​தருளி, அருள்​பாலித்து வரு​கிறார்.

ஒவ்வொரு ஆண்​டும் குரு பகவான் ஒரு ராசி​யில் இருந்து மற்​றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை​யும்​போது, குரு பகவான் சந்​நி​தி​யில் பெயர்ச்சி விழா நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இன்று (மே 26) குரு பகவான் மிதுன ராசி​யில் இருந்து கடக ராசிக்கு முற்​பகல் 11 மணிக்கு பெயர்ச்​சி யாகிறார்.

இதையொட்​டி, சந்நி​தி​யில் குருப் பெயர்ச்சி நடைபெறும் நேரத்​தில் குரு பகவானுக்கு மகா தீபா​ராதனை காட்​டப்படும். இதில், திரளான பக்​தர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

குருப் பெயர்ச்​சி​யையொட்​டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்​மம், துலாம், தனுசு, கும்​பம் ஆகிய ராசிக்​காரர்​கள் பரி​காரம் செய்​து​ கொள்ள வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தால், பரி​கார பூஜைகளும் நடை​பெறும்.

கூட்ட நெரிசலை தவிர்க்​கும் வகை​யில், பக்​தர்​கள் வரிசை​யாகச் சென்று சுவாமி தரிசனம் செய்​வதற்கு உரிய தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கழிப்​பறை, குடிநீர் உள்​ளிட்ட வசதி​களும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மன்​னார்​குடி, கும்​பகோணம், தஞ்​சாவூர் உள்​ளிட்ட இடங்களில் இருந்து ஆலங்​குடிக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

<div class="paragraphs"><p>குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். (உள்படம்) குரு பகவான்.</p></div>
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in